சீத்தாப்பழத்தில் இவ்ளோ விஷயம் இருக்கா..? இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே..!

சீத்தாப்பழம் | Custard Apple in Tamil

ஹலோ நண்பர்களே..! தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள நினைக்கிறீர்களா.? அப்போ உங்களுக்கு எங்கள் Pothunalam.Com பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி உங்களுக்கு பழங்களில் எந்த பழம் மிகவும் பிடிக்கும் சொல்லுங்கள். ஏன் இப்படி கேட்கிறேன் என்று யோசிக்கிறீர்களா..? சரி நான்  விஷயத்திற்கு வருகிறேன். உங்களுக்கு சீத்தாப்பழம் பிடிக்குமா..? சீத்தாப்பழம் பிடிக்கும் என்றால் அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டமா..? வாங்க சீத்தாப்பழம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சீத்தாப்பழம் பற்றிய தகவல்கள்:

சீத்தாப்பழம் பற்றிய தகவல்கள்

சீத்தாப்பழம் என்பது பல பழங்களுக்கு பொதுவான பெயர் மற்றும் அனோனேசியே என்ற குடும்பத்தை சேர்ந்த சீதாப்பழத்தைக் குறிக்கிறது. சீத்தாப்பழம் கஸ்டர்ட் ஆப்பிள் Custard Apple என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த சீத்தாப்பழம் அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளை தாயகமாகக் கொண்ட சீதா மரத்தின் பழமாகும். எசுபானிய வாணிபர்களால் இது ஆசியாவிற்கு கொண்டு வரப்பட்டது.

இது வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) குடும்பத்தை சேர்ந்த தாவர இனமாகும். இது 8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறிய மரமாகும்.

சீதாப்பழ மரங்கள் உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இது பல நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேலும் இந்த பழத்தை தமிழில் அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

வால்நட் சாப்பிடுவதற்கு முன் இதை தெரிஞ்சிக்கோங்க

சீத்தாப்பழம் சாகுபடி முறை: 

சீத்தாப்பழம் பற்றிய தகவல்கள்

சீதா மரம் வளர உகந்த காலநிலை 25 °C முதல் 41 °C வரை தேவைப்படுகிறது. பொதுவாக சீத்தாப்பழ மரம் மிதவெப்பப் பகுதிகளிலேயே நன்றாக வளரும் தன்மை கொண்டது. இம்மரம் குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும் தன்மையை பெற்றுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 2000 மீ (6600 அடி) உயரத்தில் வளரக்கூடியது.

சீத்தாப்பழ மரம் நன்றாக காய்க்கக் கூடியது. 2 அல்லது 3 ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை தரக்கூடிய மரமாகும். சீத்தாப்பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.

👉அதிமதுரத்தை பயன்படுத்தும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்

சீதாப்பழத்தின் நன்மைகள்: 

சீத்தாப்பழம் பற்றிய தகவல்கள்

சீதாப்பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கிறது. இதில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் இருக்கிறது. மேலும் சீத்தாப்பழத்தில் இருக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 ஞாபக சக்தியை அதிகப்படுத்தும் சீத்தா பழத்தின் நன்மைகள் 

சரி சீத்தாப்பழத்தில் இருக்கும் நன்மைகளை தெரிந்து மேல் இருக்கும் லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொண்டீர்கள். ஆனால் அதில் இருக்கும் தீமைகளை தெரிந்து கொள்ள வேண்டாமா.? அதை தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 சீத்தாப்பழத்தில் இவ்வளவு தீமைகளா

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil