பணவாட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?| Deflation Information in Tamil

deflation meaning in tamil

Deflation பற்றிய தகவல்..!

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது மிகவும் பயனுள்ள மற்றும் நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய முக்கியமான தகவல் பற்றி தான். அது என்ன தகவல் என்றால் Deflation பற்றிய தகவல் தான். நம்மில் பலருக்கும் Deflation என்பதை பற்றி விரிவாக தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. அதனால் இன்றைய பதிவில் Deflation பற்றி விரிவாக காணலாம். எனவே இன்றைய பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

பணவாட்டம் என்றால் என்ன.? 

 deflation information in tamil

Deflation என்பதன் அர்த்தம் பணவாட்டம் என்பது ஆகும். பணவாட்டம் என்பது ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை சரிவால், அந்நாட்டின் நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் அதிகரிப்பதை குறிக்கிறது.

பொதுவாக விலை குறையும் போது ஒரு நாணயத்தைப் பயன்படுத்தி வாங்கப்படும் பொருள்கள் மற்றும் சேவையின் அளவும் அதிகரிக்கிறது, ஆகவே பணவாட்டம் என்பதை, பொருட்களை  வாங்கும் திறனின் அதிகரிப்பு என்றும் கூறலாம். இதனை பொதுவாக குறைந்த பட்ச பணம் அதிக பட்ச பொருட்களை துரத்தி செல்கின்றது என்று கூறலாம்.

பொதுவாக பணவீக்கம் என்பது நாணயத்தின் உண்மையான மதிப்பை குறைப்பது ஆகும். ஆனால் பணவாட்டம் என்பது நாணயத்தின் உண்மையான மதிப்பை அதிகரிப்பது ஆகும்.

பணவாட்டம் என்பதை பொருளாதார வல்லுனர்கள் பொருளாதாரத்தின் ஒரு பெரிய பிரச்சனை என்று கூறுகிறார்கள். பணவாட்டம் என்பது வருடாந்திர பணவீக்கத்தின் விகிதம் பூஜ்யம் சதவீகிதத்தை விடக் குறைவதால் நிகழ்கிறது.

அதாவது பொருட்களோடு உற்பத்தி அதிகமாக இருந்தாலும் அந்த பொருட்களுக்கான  உரிய பணம் கொடுத்து வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது அல்லவா? அதனைத்தான் பணவாட்டம் என்கின்றனர். அதனால் தான் பணவாட்டம் என்பதை எல்லோரும் மோசமான ஒரு நிகழ்வாக எண்ணுகின்றனர்.

பணவாட்டம் நுகர்வோருக்கு நன்மையை தரவல்லது. ஏனென்றால் பணவாட்டத்தின் போது  அவர்களால் குறைந்த பணத்தை வைத்துக் கொண்டு அதிக அளவு பொருட்கள் மற்றும் சேவைகளை பெறமுடிகிறது அல்லவா.

பணவாட்டத்தின் வகைகள்:

பணவாட்டம் நான்கு வகைப்படும். அவை,

  1. வளர்ச்சிப் பணவாட்டம்.
  2. பண சேகரிப்பு பணவாட்டம்
  3. வங்கிக் கடன் பணவாட்டம்.
  4. பறிமுதல் பணவாட்டம்.

பணவாட்டதின் விளைவுகள்:

  1. நாணயத்தின் வாங்கும் திறன் அதிகரிக்கும்.
  2. சேமிப்பு மற்றும் முதலீடுகள் அதிகரிக்கும்.
  3. வேலையின்மை பணவாட்டத்தின் மிகவும் பாதகமான விளைவாக இருக்கலாம். விலை வீழ்ச்சியால் நிறுவனத்தின் லாபம் குறைந்தால், நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஆரம்பிக்கலாம்.

இதையும் படியுங்கள் => Inflation பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள் | Inflation Information in Tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil