கனவில் நாய் வந்தால் என்ன பலன்..! Dog Kanavu Palangal in Tamil..!

Dog Kanavu Palangal in Tamil

நாய் கனவு பலன்கள்..! Dog Dreams in Tamil..!

Dog Kanavu Palangal in Tamil:- கனவுகள் பொதுவாக கடந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் இடையில் ஒரு சாவியாக இருக்கிறது என்று சாஸ்த்திரங்கள் கூறுகின்றது. கனவுகள் நமக்கு நடக்க இருக்கும் இன்பம், துன்பங்களை முன்கூட்டியே உணர்த்துவதாக காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் மிருகங்கள் நம் கனவில் வருவது நமக்கு வரவிருக்கும் ஆபத்துகளை உணர்த்துகிறது என்று சொல்லலாம்.

சிலருக்கு நாய் வளர்ப்பது ரொம்ப பிடித்த விஷயம். இது வீட்டை காக்கும் விலங்கு. அதுமட்டுமல்லாமல் வீட்டில் உள்ளவர்களிடம் மிகவும் அன்பாக பழகும் விலங்கினங்களில் ஒன்று என்றும் சொல்லலாம். இத்தகைய நாய் தங்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்று இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்ளாம் வாங்க.

நாய் ஊளையிடுவது நல்லதா? கெட்டதா? இதுதான் உண்மை காரணம்..!

நாய் கனவு பலன்..! Dog Kanavu Palangal in Tamil..!

நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன் – dog kanavil vanthal enna palan:-

நாய் துரத்துவது போல் கனவு

naai kadipathu pol kanavu palan – தங்களை நாய் துரத்துவது போல் கனவு வந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா? நாய் உங்களை துரத்துவது போல் கனவு வந்தால் உங்களை நோக்கி காதல் வரப்போகிறது என்று அர்த்தமாகும்.

அதாவது நீங்கள் யாரையாவது விரும்பினால் அவர்கள் உங்களை தேடி வரப்போவதன் அர்த்தம் தான் இது. இல்லையெனில் உங்களை யாரோ மனதிற்குள் காதலிப்பதன் அர்த்தம் இது.

நாய் கடிப்பது போல் கனவு கண்டால் நல்லதா கெட்டதா?

நாய் கடிப்பது போல் கனவு

தங்களை நாய் கடிப்பது போல் கனவு வந்தால், தாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். அதாவது தங்களுக்கு நம்பிக்கை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட போகிறது என்பதற்கான அர்த்தமாகும்.

கனவில் உங்களை நாய் கையில் கடித்தால் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் விரைவில் துரோகம் செய்ய போகிறார்கள் என்று அர்த்தம்.

உங்களுக்கு ஏற்படப்போகும் நெருக்கடியான சூழ்நிலையில் உங்களுக்கு விருப்பமானவர்களே உங்களை தவிக்க விட்டுவிட்டு சென்று விடுவார்கள். மேலும் இது நீங்கள் செய்ததற்கான எதிர்வினையாக இருக்கலாம்.

நாய் குறைப்பது போல் கனவு கண்டால்:

கனவில் நாய் சந்தோசமாக குலைப்பது போல் கனவு கண்டால், பிறருடன் கனவு காணும் தொடர்பு மிகவும் அமைதியானதாக இருக்கும். அதுவே நாய் கோபமாக குலைப்பது போல் கனவு கண்டால் கனவு காண்பவர் மற்றவர்களால் மனநிம்மதியை இழப்பார்கள் என்பதை இந்த கனவு பலன் உணர்த்துகிறது.

பிரவுன் நாய் கனவு பலன்:-

brown dog

நாய் கனவு பலன் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட நிற நாய் மட்டும் உங்கள் கனவில் வருவதற்கு ஒரு குறிப்பிட்ட அர்த்தம் உள்ளது. அதாவது உங்கள் கனவில் ப்ரவுன் நிற நாய் வருவது நல்ல அறிகுறி அல்ல. இவ்வாறு கனவு வருவது நீங்கள் மிகவும் மோசமான பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள போகிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.

உங்கள் கனவில் ப்ரவுன் நாய் வந்தால் அதற்கு பின் நீங்கள் வாழ்க்கையில் முடிவெடுக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக எடுத்து வையுங்கள்.

குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்..!

வெள்ளை நாய் கனவு பலன்:-

white dog

வெள்ளை என்பது தூய்மை மற்றும் அமைதியின் அடையாளமாகும். உங்கள் கனவில் வெள்ளை நாய் வந்தால் நிம்மதியாக இருங்கள், ஏனெனில் இது நல்ல அறிகுறியாகும். இது உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உண்மையாக இருக்க போகிறார்கள் என்பதன் அறிகுறியாகும்.

அவர்களின் நோக்கங்கள் உண்மையானதாகவும், உங்களுக்கு நன்மை விளைவிப்பதாகவும் இருக்கும். இந்த கனவு வந்தால் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல நேரம் தொடங்க போகிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.

கருப்பு நாய் கனவு பலன்கள்:-

black dog

பொதுவாக கருப்பு நாய் கனவில் வருவது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகள் ஏற்படபோவதன் அறிகுறி ஆகும். இது உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் பல சம்பவங்களை பிரதிபலிப்பாகும்.

உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் உங்களுக்கு கெடுதலை ஏற்படுத்தலாம் அப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். மேலும் இது உங்களுக்கு அதீத பதட்டம் ஏற்படப்போகிறது என்பதை குறிக்கும்.

கனவில் திருமணம் நடந்தால் என்ன பலன்..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil