பெருஞ்சீரகம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Fennel Seeds in Tamil

Fennel Seeds in Tamil

வணக்கம் இனிமையான நெஞ்சம் கொண்ட நேயர்களே..! இன்றைய பதிவில் பெருஞ்சீரகம் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள போகிறோம். தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் எங்கள் பொதுநலம்.காம் பதிவை படித்து பயன்பெறுங்கள். பெருஞ்சீரகம் என்பது நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் பயன்படுத்த கூடிய உணவு பொருள் ஆகும். இந்த பெருஞ்சீரகம் உணவுகளில் அதிகளவு பயன்படுத்தபடுகிறது. நாம் இன்று பெருஞ்சீரகம் பற்றிய சில தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பெருஞ்சீரகம்:

பெருஞ்சீரகம் அல்லது சோம்பு என்று அழைக்கக்கூடிய இது போனிகுலம் பேரினத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். இந்த பெருஞ்சீரகம் கேரட் குடும்பத்தின் ஓர் அங்கமாக திகழ்கிறது. இது கேரட் குடும்பத்தில் ஒரு பூக்கும் தாவர இனத்தை சேர்ந்தது.

இந்த பெருஞ்சீரகம் சோம்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த பெருஞ்சீரகம் மத்திய தரைக்கடல் பகுதிகளில் அதிகளவு காணப்படுகிறது. இந்த பெருஞ்சீரகம் மஞ்சள் பூக்களையும் சிறிய பச்சை இறகு போன்ற இலைகளையும் கொண்டுள்ளது.

இந்த பெருஞ்சீரகமானது கடற்கரை பகுதியிலும், ஆற்றங்கரை போன்ற உலர்ந்த மண்ணில் வளரும் தன்மையை கொண்டுள்ளது.

இது வாசனை பரப்பக்கூடிய மூலிகை தாவரம் என்று கூறுகிறார்கள். பெருஞ்சீரகம் மூலிகை பொருட்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

பெருஞ்சீரகம் மூலிகை பொருளாக இருப்பதால் சமையல் மற்றும் மருத்துவத்திற்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த பெருஞ்சீரகம் நிமிர்ந்த செடியாக வளர்கிறது. பளபளப்பான பச்சை நிறத்தை கொண்டுள்ளது. பெருஞ்சீரகம் தண்டுகளுடன் 2.5 மீட்டர் 8 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் 40 சென்டிமீட்டர் வரை வளர கூடியன.

பெருஞ்சீரகத்தின் இலைகள் வெந்தயம் போன்ற அமைப்பை கொண்டுள்ளது. இருந்தாலும் மென்மையானதாக காணப்படுகிறது.

இந்த பெருஞ்சீரகம் மருத்துவத்தில் மருந்தாக பயன்படுகிறது. இது பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது அதிகளவில் நறுமணத்தை பரப்பக்கூடிய மூலிகையாக திகழ்கிறது.

இந்த பெருஞ்சீரக விதைகள் கண் பார்வையை அதிகரிக்க செய்கிறது. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சிறுநீரை சுத்தப்படுத்துகிறது. மேலும் இந்த பெருஞ்சீரகம் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil