இந்திய தேசிய கொடி ஏற்றும் முறை | National Flag Rules in Tamil

தேசிய கொடி ஏற்றும் நேரம் | தேசிய கொடி இறக்கும் நேரம்

இந்திய தேசியக் கொடி என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், ஜூலை 22, 1947 அன்று ஏற்கப்பட்ட இந்திய நாட்டின் கொடியாகும். ஜனவரி 26, 1950-இல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது. இந்திய தேசிய கொடியை ஏற்றுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் படித்தறியலாம் வாங்க..

மூவர்ண கொடியின் சிறப்பு

இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தவர் யார்::

 • பிங்காலி வெங்கையா என்ற விவசாயி.

தேசிய கொடி ஏற்றும் நேரம்:

 • தேசிய கொடியை காலை 07:30 மணி முதல் ஏற்றலாம்.

தேசிய கொடி இறக்கும் நேரம்:

 • தேசிய கொடியினை மாலை 06:00 PM மணிக்குள் இறக்கி விட வேண்டும்.

தேசிய கொடி ஏற்றும் விதிமுறைகள்:

தேசிய கொடி ஏற்றும் விதிமுறைகள்

 • ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ஜனவரி 26 மற்றும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தேசிய கொடியை அரசு மரியாதையுடன் ஏற்றுவது வழக்கம். உலகம் முழுவதிலுமே தேசியக் கொடிகளுக்கு என்று சில மரியாதைகள் உண்டு.
 • பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம் வாங்கிய இந்த 71 ஆண்டுகளில் நாட்டில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்ப்பட்டு உள்ளனர். தற்போது பொதுமக்கள் வீடு, அலுவலகம் மற்றும் கார் போன்ற இடங்களில் தேசியக்கொடியை வைக்க அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் இன்னும் பெரும்பாலான மக்களுக்கு தேசியக்கொடி பற்றிய விதிமுறைகள் தெரியவில்லை.
 • 2005ல் சட்ட திருத்தப்படி இந்திய தேசியக்கொடி இடுப்பிற்கு கீழ் அணியக்கூடாது போன்ற சில விதிகள் மேம்படுத்தப்பட்டது. இதில் கொடியை கால் சட்டையாக அணிவதற்கு தடை இருந்தது.
 • இந்திய தேசியக்கொடியைக் கையினால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும்.
 • தேசிய கொடியை ஏற்றும் போது எக்காள ஒலியுடன் விரைவாக ஏற்ற வேண்டும்.
 • கொடியை கீழே இறக்கும் போது சற்று மெதுவாகவும், அலங்காரமாகவும் இறக்க வேண்டும். பழுதடைந்த அல்லது கசங்கிய கொடியை பறக்க விடக்கூடாது.
 • சிலை அல்லது நினைவுச் சின்னத்தை மூடுவதற்குத் தேசியக்கொடியைப் பயன்படுத்தக்கூடாது.
 • தங்களுடைய கார்களில் கொடிகளைப் பறக்க விட ஆசைப்பட்டால் நிலையாகப் பொருத்தப்பட்ட கம்பியில் தான் பறக்க விட வேண்டும்.
 • தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலம் செல்லும் போது, வலப்பக்கமாக ஏந்திச் செல்ல வேண்டும்.
 • மேலும் நிறைய மற்ற கொடிகள் இருந்தால், அனைத்து கொடிக்கும் முன்பு நமது தேசியக் கொடி இருக்கவேண்டும்.
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil