நூலகத்தின் முக்கியத்துவம் | Noolagathin Mukkiyathuvam

நூலகத்தின் பயன்கள் எழுதுக | Library Benefits in Tamil

அன்பான வணக்கம் பொதுநலம்.காம் வாசகர்களுக்கு இன்று அனைவருக்கும் முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி தெரிந்துகொள்வோம். அது என்னவென்றால் நூலகம் என்பது என்ன? அதன் பயன்கள் என்ன? நூலகம் இருப்பதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் இந்த பதிவில் பார்க்க போகிறோம். நம் நாட்டில் பல மேதைகள் நூலத்தில் படித்து பெரிய வெற்றிகளை அடைந்து இருக்கிறார்கள். அப்பெரிய மேதைகள் சிறுவர்களுக்கு அளிக்கும் அறிவுரைகள் ஒன்றுதான் நன்கு படியுங்கள் என்று அறிவுரைகள் வழங்குவார்கள். ஏனென்றால் நூலகத்தின் நன்மைகள் அவர்களுக்கு நன்றாக தெரியும். இப்போது நூலகத்தின் நன்மைகள் பற்றி தெளிவாக காண்போம்.

நூலகம் கட்டுரை

நூலகத்தின் வேறு பெயர்கள்:

 • நூல் நிலையம்
 • புத்தகச் சாலை என இரு பெயர்கள் உள்ளது.

நூலகத்தின் தந்தை:

 • இந்தியாவின் நூலக அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன் ஆவர்.

நூலகத்தின் வகைகள் யாவை:

 • அரசு பொது நூலகங்கள்,
 • சிறுவர்க்குரிய நூலகங்கள்,
 • தனியார் வணிக முறை நூலகங்கள்,
 • நடமாடும் நூலகங்கள் என நூலகங்கள் பிரிக்கப்படுகின்றன.

நூலகத்தின் விதிமுறைகள்:

Library

 

 • நூலகரின் மேற்பார்வையின் கீழ் நூலகம் செயல்படும்.
 • நூலகத்தை அனைவரும் படித்து பயன் பெறலாம்.
 • நூலகத்தின் அமைதியை எப்போதும் கடைபிடிக்க வேண்டும்.
 • நூலகத்தின் ஒழுக்கமின்மை, அதிகம் சத்தங்களை தரக்கூடாது.
 • நூலகம் காலை 10.00 மணி முதல் மாலை 4.00. மணி வரை திறந்திருக்கும்.
 • நூலகத்தில் உறுப்பினராக வேண்டும்மென்றால் அதற்கான புவிவாத்தை விண்ணப்பித்து, நூலகத்தின் உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
 • நூலகத்திலிருந்து புத்தகத்தை பெற்றுக்கொண்ட பிறகு 15 நாட்களுக்குள் திருப்பிக்கொடுக்கவேண்டும்.
 • அப்படி கொடுக்கவில்லை என்றால் ஒன்றுக்கு 50 பைசா வசூலிக்கப்படும்.இதுவே நூலகத்தின் விதிமுறைகள் ஆகும்.

 

 

நூலகத்தின் சிறப்பு:

“தொட்டனை தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு” இவ்வாறு குறிப்பிடுகின்றார் வள்ளுவர்.

விளக்கம்:

 • நிலத்தின் எந்த அளவிற்கு குழி தோற்றுகிறீர்களோ அளவிற்கு நீரோட்டம் அதிகமாக இருக்கும். அதே போல் தான் மனிதனும் எந்த அளவிற்கு புத்தகத்தை கற்கிறானோ அந்த ளவிற்கு முன்னேற்றம் அடைவான்.

நூலகத்தின் தேவை:

 • ஒரு மனிதன் எப்போது நூலகத்தில் கால் பதித்தனோ. அப்போதே அவன் அறிவினை வைத்து ஆயிரம் பேர் கற்பிக்கலாம் என்று அர்த்தம்.
 • ஒரு புத்தகத்தில் கற்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது அதனை அறிந்து அத்தனையும் கற்க ஆரம்பித்தால் தினமும் புதிய மனிதனை போல் உன்னை நீயே உணருவாய்.
 • நீ படிப்பதை நீயே வைத்துக்கொண்டு ஒரு பயன் இல்லை அதனை அனைவருக்கும் கற்பிக்கவும் செய். நீங்கள் அறிந்த நூலகத்தின் சிறப்பை வைத்து அனைவரையும் நூலத்தை அடைய செய் அதே நீ செய்யும் பெரிய நன்மை என்று பல அறிஞர்கள் கூறிப்பிடுகிறார்கள்.
 • எப்போது நாட்டில் புதிய நூலகம் உருவாகிறதோ அப்போது ஒரு சிறை சாலை மூடப்படுகிறது. காரணம் நூலகத்தில் கிடைக்கும் அமைதி உங்களுக்கு வேறு எங்கும் கிடைக்காது. நீ ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்தான் பசி தூக்கம் வாராது வேறு எங்கும் சிந்தனை செல்லாது. எப்போது இந்த இந்த அப்புத்தகத்தை முடிவினை பார்க்கலாம் என்று ஆர்வம் வரும் அதனால் உனக்கு வேறு எந்த தேவையில்லாத குழப்பங்களை மூளையில் ஏற்றுக்கொள்ள முடியாது.
 • எவ்வளவு பெரிய கோபம்முற்றவனாக இருந்தாலும் நூலத்தில் அடி எடுத்து வைத்தால் அவனை போல் யாரும் இருக்க முடியாத அளவிற்கு மாற்றலாம். அதுவே நூலகத்தின் சிறப்பு ஆகும்.
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil