பாரதியாரின் பாஞ்சாலி சபதம் நூல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Panjali Sabatham in Tamil

பாஞ்சாலி சபதம் | Panjali Sabatham in Tamil..! 

வணக்கம் அன்பான நேயர்களே… இன்று இந்த பதிவில் பாரதியார் இயற்றிய பாஞ்சாலி சபதம் நூல் பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். மகாகவி பாரதியார் அவர்கள் மகாபாரதக் கதையை பெண்ணுரிமைக் காப்பியமாக தமிழில் பாஞ்சாலி சபதம் என்னும் நூலை வடிவமைத்தார். நம் இந்திய விடுதலை போராட்டத்தை பற்றி பாரதப் போராக இந்நூலில் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பாஞ்சாலியை பாரதத் தேவியாகவும் இந்நூலில் வடிவமைத்து கூறியுள்ளார். மேலும் இந்நூல் பற்றிய தகவல்களை விரிவாக இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ மலைபடுகடாம் ஆசிரியர் குறிப்பு

பாஞ்சாலி சபதம் நூல் குறிப்பு: 

20 ஆம் நூற்றாண்டில் இந்திய கவிஞர்களில் ஒருவரான மகாகவி சுப்பிரமணிய பாரதியாரால் எழுதப்பட்ட காப்பியம் தான் பாஞ்சாலி சபதம். இந்நூலில் மகாபாரதத்தில் உள்ள நிகழ்ச்சி ஒன்றை காப்பியத்தின் மையப்பொருளாக வைத்து இந்நூலை படைத்துள்ளார்.

பாஞ்சாலி சபதம் 2 பாகங்களையும் 5 சருக்கங்களையும் கொண்ட நூல் ஆகும். முதல்பாகம் “அழைப்புச் சருக்கம், சூதாட்டச் சருக்கம் என 2 சருக்கங்களைக் கொண்டுள்ளது. இரண்டாம் பாகம் “அடிமைச் சருக்கம், துகில் உரியல் சருக்கம், சபதச் சருக்கம் என 3 சருக்கங்களைக் கொண்டுள்ளது. இந்நூல் 412 பாடல்களை கொண்டுள்ளது.

இந்நூலில் ஒவ்வொரு பாகமும் கடவுள் வாழ்த்து பாடலுடன் தொடங்குகிறது. இந்நூலில் பராசக்தி மற்றும் வாணி ஆகிய தெய்வங்களைப் பற்றிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன. பாஞ்சாலி சபதத்தின் முதல் பாகம் பாரதி வாழ்ந்த காலத்திலேயே வெளிவந்தது. ஆனால் 1924 ஆம் ஆண்டு முழு நூலையும் பாரதியார் வெளியிட்டார்.

திருமுருகாற்றுப்படை நூல் குறிப்பு

பாஞ்சாலி சபதம் சிந்து என்னும் பாவகையில் தமிழ் எளிய நடையினை கொண்டுள்ளது. சிந்து என்பது இசை பாட்டிற்குரிய சரணங்களின் கண்ணிகளை மட்டும் கொண்டது. இந்நூலை பாரதியார் 1919 ஆம் ஆண்டிலேயே எழுதி முடித்து விட்டார். இந்த செய்தி வயி. ச.சண்முகம் செட்டியாருக்கு எழுதிய கடிதத்தின் மூலம் தெரிய வந்தது.

தமிழனுக்கு நாட்டுப்பற்று ஊட்ட வேண்டிய தேவையை அடிப்படையாக கொண்டும்,  “பெண்ணடிமை தீர்ந்தாலே நாடு விடுதலை அடையும்” என்னும்  கருத்தினை வலியுறுத்தி இந்நூலில் கூறியுள்ளார். பாஞ்சாலி சபதம் முழுவதும் நொண்டிச்சிந்து என்ற பாவகையை சார்ந்தது.

பாஞ்சாலி சபதம் ஆசிரியர் குறிப்பு:

பாரதியார் அவர்கள் தனது பாட்டு திறத்தால் அடிமையாக கிடந்த தமிழ் சமூகத்தை எழுச்சி பெற செய்தவர். மகாகவி பாரதியார் 11.12.1882 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் சின்னச்சாமி அய்யருக்கும், இலக்குமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பையா. பாரதியார் அவர்கள் பதினோராம் வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர். எட்டயபுர சமஸ்தானப் புலவர்களால் ‘பாரதி‘ என்ற புகழான பட்டத்தை பெற்றார். இவர் 1903 ஆம் ஆண்டு தொடங்கி 1914 ஆம் ஆண்டு வரை கவிதைகளை எழுதிக் குவித்தார்.

இந்திய நாட்டு விடுதலைக்காகவே பல கவிதைகள் எழுதியதால் பாரதியார் “தேசிய கவி” என்னும் பட்டதை பெற்றார். 1920 ஆம் ஆண்டு சென்னையில் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியர் பணியில் சேர்ந்தார். திருவல்லிக்கேணி பகுதியில் வாழ்ந்து வரும் போது, கோயில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டு 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார். பாரதியார் எழுதிய கவிதைகள் இன்றும் இவருடைய புகழை பாராட்டி வருகிறது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil