தமிழ் வழிச் சான்று படிவம் | PSTM Certificate in Tamil
தமிழ் வழி கல்வி பயின்றதற்கான சான்றிதழ் அப்படி என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு ஆங்கிலத்தில் PSTM Certificate என்று பெயர்.இந்த சான்றிதழ் எதற்காக வாங்க வேண்டும், இதை எதற்கு பயன்படுத்த வேண்டும் மேலும் அதை எப்படி பெற வேண்டும் என்பதையெல்லாம் இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
PSTM சான்றிதழ்:
- PSTM Certificate இதற்கு Full Form Person Studied In Tamil Medium. அதாவது நீங்கள் தமிழ் வழி கல்வியில் பயின்றதற்கான ஆதாரமாக இந்த சான்றிதழை வாங்க வேண்டும். இதை எதற்கு வாங்க வேண்டும் என்றால் நீங்கள் ஏதேனும் பொதுத்தேர்வு எழுதும் போது அதில் மதிப்பெண்கள் அல்லது Rank List-ல் பின் தங்கியிருந்தால் அப்பொழுது இந்த PSTM Certificate உங்களுக்கு உதவும்.
- ஏனென்றால் தமிழ்நாடு அரசு தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு தந்துள்ளது.
தமிழ் வழி கல்வி சான்றிதழ் கோரி விண்ணப்பம்!
உதாரணத்திற்கு: TNPSC தேர்வில் 1000 காலியிடங்கள் இருந்தால் அதில் 200 காலியிடங்கள் Tamil Medium படித்தவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும்.
- மேலும் நீதித்துறை, வனத்துறை, காவல் துறை போன்ற துறைகளில் நடக்கும் தேர்விற்கு இந்த PSTM Certificate உங்களுக்கு உதவும்.
- பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் ஆங்கிலத்தை தவிர மற்ற பாடங்களான தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களை தமிழில் படித்திருப்பவர்கள் இதனை பெற முடியும்.
- ஆங்கில வழி கல்வி பயின்றவர்கள் அதாவது தமிழை தவிர பிற பாடங்களை ஆங்கிலத்தில் கற்றவர்கள் இந்த PSTM Certificate-ஐ பெற முடியாது.
- அதே போல கல்லூரியிலும் ஆங்கிலத்தை தவிர மற்ற பாடங்களை தமிழில் படித்திருக்க வேண்டும். ஏனென்றால் Group -4 போன்ற தேர்வுகளுக்கு கல்வி தகுதி 10-ம் வகுப்பு இருந்தாலே போதும்.
- ஆனால் Group-1, Group-2 போன்ற தேர்வுகளுக்கு கல்வி தகுதி Degree என்பதால் இளங்கலை பட்டம் தமிழில் படித்திருந்தால் மட்டுமே இந்த PSTM Certificate -ஐ பெற முடியும்.
PSTM Certificate Format For Hsc in Tamil
10-ம் மற்றும் 12-ம் வகுப்பு படித்தவர்க்கான PSTM Certificate:
- இதில் தங்களது பெயர், தாங்கள் எந்த வருடம் பத்தாம் வகுப்பு படித்தீர்கள் மற்றும் படித்து முடித்தீர்கள் என்பதை தெளிவாக எழுத வேண்டும். பின் தாங்கள் படித்த பள்ளியில் தலைமை ஆசிரியரின் கையெழுத்து மற்றும் Seal வாங்க வேண்டும்.
- பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் வழியில் படித்ததற்கான PSTM Certificate வேண்டும் எனில் அதில் எந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தீர்கள் மற்றும் படித்து முடித்தீர்கள் என்பதை தெளிவாக எழுத வேண்டும். பின் தாங்கள் படித்த பள்ளியில் தலைமை ஆசிரியரின் கையெழுத்து மற்றும் Seal வாங்க வேண்டும்.
Pstm Certificate For Degree in Tamil:
- இதில் தங்களது பெயர், என்ன Degree படித்தீர்கள், எந்த வருடம் படித்தீர்கள், மற்றும் எந்த வருடம் Degree படித்து முடித்தீர்கள் என்பதை தெளிவாக எழுத வேண்டும். பின் தாங்கள் படித்த கல்லூரியில் Principal அல்லது Registrar கையெழுத்து மற்றும் Seal வாங்க வேண்டும்.
முதல் பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி? |
வருமான சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |