நகைச்சுவை விடுகதைகள் | Tamil Riddles With Answers
New Riddles in Tamil:- வணக்கம் இன்றைய பதிவில் எல்லோருக்கும் மிகவும் பிடித்த விடுகதைகள் மற்றும் விடைகள் பற்றி தெரிந்து கொள்வோம். ஓரிரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக விவரித்து சொல்லப்படும் ஒரு புதிரே விடுகதை ஆகும். இந்த புதிரில் ஆயிரம் அர்த்தங்கள், விஷயங்கள் மற்றும் கருத்துக்கள் அடங்கி இருக்கும். பொதுவாக நம்மில் பலருக்கு விடுகதை ஒருவரிடம் கேட்கவும், அல்லது அதற்கு விடை கண்டுபிடித்து சொல்லவும் அதிக ஆர்வமாக இருக்கும். அந்த வகையில் இப்பதிவில் தமிழ் விடுகதை மற்றும் விடைகள் பதிவு செய்துள்ளோம் அவற்றை ஒவ்வொன்றாக படித்து அதற்கான விடைகளை தெரிந்து கொள்வோம் வாங்க.
தமிழ் நகைச்சுவை விடுகதைகள் – Riddles in Tamil – சிறந்த விடுகதைகள் with answer:
1 என்னை கீழே போட்டால் நான் உடைந்து விடுவேன்.. என்னை பார்த்து சிரித்தால் நான் உங்களைப் பார்த்து சிரிப்பேன் நான் யார்?
விடை: கண்ணாடி.
2 மலைகள் இருக்கு ஆனால் கற்கள் இல்லை.. ஆறுகள் இருக்கு ஆனால் தண்ணீர் இல்லை.. நகரம் இருக்கு ஆனால் கட்டடம் இல்லை நான் யார்?
விடை: மேப் (Map)
3 முடியும் இல்லாத, முகத்திலும் இல்லாத தாடி அது எது?
விடை: காத்தாடி
4 எட்டுப் பேர் நாங்க எங்க தலைவரைக் காப்பாத்த முன்னாலே போவோம் பின்னாலே வரமாட்டோம் நாங்கள் யார்?
விடை: Chess Pawn
5 அறைகள் உண்டு இது வீடு அல்ல, சித்திரமும் அல்ல, காவலுக்கு ஆயிரம் வீரர்கள் உண்டு கோட்டையும் அல்ல அது என்ன?
விடை: தேன் கூடு
6 உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணிந்திருப்பான் அவன் யார்?
விடை: வெங்காயம்
7 உலகம் முழுவதும் பறந்து செல்வேன், ஆனால் ஒரு மூளையை விட்டு நகர மாட்டேன் நான் யார்?
விடை: ஸ்டாம்ப் (Stamp)
8 வானத்தில் பறக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் பறவை இது. அது என்ன?
விடை: விமானம்
9 ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் ஓடுவான், ஒருவன் நடப்பான் அவன் யார்?
விடை: கடிகாரம்.
10 அனைவரையும் நடுங்க வைப்பான் ஆதவனுக்கே அடங்குவான் அவன் யார்/
விடை: குளிர்
சிறந்த விடுகதைகள் – Riddles in Tamil:
விடுகதைகள் – Tamil Riddles With Answers | விடைகள் |
உலகின் மிகச்சிறிய முட்டையிடும் பரவியினம் எது? | ஹம்மிங் பறவை |
உலகில் அதிக மருத்துவர்கள் உள்ள நாடு எது? | ரஸ்யா |
மிருகங்களில் அதிக ரத்த ஓட்டம் உள்ள பிராணி எது? | ஒட்டகச்சிவிங்கி |
ஜனவரி மாதம் முதலாம் திகதி சுதந்திர தினம் கொண்டாடும் நாடுகளில் ஒன்று? | சூடான் |
உலகில் அதிகமான நாடுகளை கொண்ட கண்டம் எது? | ஆபிரிக்கா |
உலகில் தேங்காய் அதிகளவில் விளைகின்ற நாடு எது? | பிலிப்பைன்ஸ் |
நீர் அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது? | டால்பின் |
உலகில் அதிக விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது? | ஸ்டான் பிஷ் |
தலையில் இதயத்தை கொண்டுள்ள மீன் இனம் எது? | இறாள் |
உலகில் அதிக அருங்காட்சியகங்கள் உள்ள நாடு எது? | ஜெர்மனி |
தமிழ் நகைச்சுவை விடுகதைகள் – Riddles in Tamil:
நகைச்சுவை விடுகதைகள் | Tamil Riddles With Answers |
1. ஆடி ஆடி நடந்தான், அமைதியாக அதிர வைத்தான் அவன் யார்? | யானை |
2. உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன் அவன் யார்? | எறும்பு |
3. அடித்தாலும், உதைத்தாலும் அழ மாட்டான் அவன் யார்? | பந்து |
4. மழையோடு வருகின்ற வெள்ளை புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது அது என்ன? | ஈசல் |
5. இருப்பது இரண்டு கால் ஓடுவது குதிரை வேகம் இறக்கை உண்டு பறக்காது அது என்ன? | நெருப்புக் கோழி |
6. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன் அவன் யார் ? | தலையணை |
7. பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்? | சீப்பு |
8. ஐந்து வீட்டிற்க்கு ஒரு முற்றம் அது என்ன? | உள்ளங்கையும் விரல்களும் |
9. கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன? | நிழல் |
10. காற்றைக் குடித்து காற்றில் பறப்பான் அவன் யார்? | பலூன் |
புதிர் விடுகதைகள் | Tamil Puthir with Answer:
விடுகதைகள் – Tamil Riddles With Answers | விடைகள் |
1. இலையுண்டு கிளையில்லை, பூ உண்டு மணமில்லை, காய் உண்டு விதையில்லை, பட்டை உண்டு கட்டை இல்லை, கன்று உண்டு பசு இல்லை அது என்ன? | வாழை |
2. எவ்வளவு முயன்றாலும் அவனை கடிக்க முடியாது. அவன் இல்லாமல் உணவே இல்லை. அவன் யார் ? | தண்ணீர் |
3. பூ பூக்கும். காய் காய்க்கும். ஆனால் பழம் பழுக்காது. அது என்ன? | தேங்காய் |
4. இளமையில் பச்சை, முதுமையில் சிகப்பு, குணத்திலே எரிப்பு. விடை தெரியுமா? | மிளகாய் |
5. தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன? | நெல் |
6. அடிக்காமல், திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்? | வெங்காயம் |
7. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்? | மெழுகுவர்த்தி |
8. நீண்ட உடலிருக்கும் தூணும் அல்ல, உடலில் சட்டை இருக்கும் ஆனால் உயிர் இல்லை, துயிலில் சுகம் இருக்கும் மெத்தை அல்ல அது என்ன? | தலையணை |
9. இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன? | கடிகாரம் |
10. வெயிலில் மலரும், காற்றில் உலரும். அது என்ன? | வியர்வை |
சிறந்த நகைச்சுவை விடுகதைகள் | Riddles in Tamil
விடுகதைகள் – Tamil Riddles With Answers | விடைகள் |
1. போகும் இடமெல்லாம் கோடு கிழித்திடுவான் – அவன் யார்? | நத்தை |
2. இருந்தாலும், இறந்தாலும், பறந்தாலும் இறக்கை மடக்காத பட்சி – அது என்ன? | தட்டாம் பூச்சி |
3. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன? | கண் |
4. அச்சு இல்லாத சக்கரம்: அழகு காட்டும் சக்கரம். அது என்ன? | வளையல் |
5. ஓடியாடித் திரியும் – உடலைத் தேடிக் குத்தும் – அது என்ன? | கொசு |
6. கனியிலே சிறந்த கனி, என்றுமே திகட்டாத கனி… அது என்ன? | பிள்ளைக்கனி |
7. கடுகு மடிக்க இலை இல்லை, யானை படுக்க இடமுண்டு- அது என்ன? | சவுக்குமரம் |
8. நீரிலே பிறப்பான்.. வெயிலிலே வளர்வான்.. நீரிலே இறப்பான்..! அவன் யார்? | உப்பு |
9. செய்வதைச் செய்யும் குரங்கும் அல்ல; சிங்காரிக்க உதவும் சீப்பும் அல்ல. அது என்ன? | கண்ணாடி |
10. அக்கா வீட்டுக்குத் தங்கை போவாள்.. ஆனால், தங்கை வீட்டுக்கு அக்கா வரமுடியாது! அது என்ன? | கால் படி, அரை படி |
மேலும் படிக்க கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள் |
சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள் |
குழந்தைகளுக்கான விடுகதைகள் |
தமிழில் விடுகதைகள் கேள்வி பதில் |
விடுகதைகள் | Vidukathaigal |
நகைச்சுவை விடுகதைகள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |