திருக்குறள் 4 அதிகாரம் | Thirukkural Adhikaram 4

Thirukkural Adhikaram 4

அறன் வலியுறுத்தல் திருக்குறள் | Thirukkural Adhikaram 4 in Tamil

திருவள்ளுவர் தனது அதிகாரத்தில் பல கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார். அந்த வகையில் திருவள்ளுவர் தனது நான்காவது அதிகாரத்தில் அறத்தை பற்றி விவரித்துள்ளார். அறம் என்பது ஒருவரிடம் இருக்கும் நல்ல பண்பை உணர்த்துவதாகும். அறத்தை பின்பற்றி வாழ்பவர்களின் வாழ்க்கை மேன்மையும், பெருமையும் அளவில்லாது கிடைக்கும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். சரி வாங்க திருவள்ளுவர் அறத்தை பற்றி குறள் மூலம் என்ன கூறுகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அறன் வலியுறுத்தல் அதிகாரம் விளக்கம்:

குறள்: 31

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு

பொருள்:

அறத்தினை பண்பாக கொண்டு வாழ்பவரின் வாழ்க்கையில் செல்வமும், சிறப்புகளும் அளவில்லாது கிடைக்கும்.

குறள்: 32

அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.

பொருள்:

அறத்தை பின்பற்றி வாழ்ந்தால் அது தரும் உயர்வை போல் வேறு எதுவும் இல்லை, அதை பின்பற்றி வாழாதவர்களின் வாழ்க்கையில் சந்திக்கும் கெடுதலுக்கும் அளவில்லை.

குறள்: 33

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.

பொருள்:

செய்ய கூடிய செயல்கள் எந்த இடமாக இருந்தாலும் அங்கெல்லாம் அறச்செயலை தொய்வின்றி செய்ய வேண்டும்.

திருக்குறள் 4 அதிகாரம்:

குறள்: 34

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.

பொருள்:

அறம் என்பது மனதில் எவ்வித குற்றமும் இல்லாமல் இருப்பது தான். மனத்தூய்மை இல்லாத மற்றவையெல்லாம் வெறும் சடங்குகளே ஆகும்.

குறள்: 35

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

பொருள்:

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் இந்த நான்கும் மனதில் இல்லாமல் வாழ்வதே அறமாகும்.

Thirukkural Adhikaram 4:

குறள்: 36

அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

பொருள்:

அறம் செய்வதாக இருந்தால் உடனே செய்ய வேண்டும். நேரம், காலம் பார்த்து செய்யாமல் இருக்கும் அறமே சிறப்பை அடையும். காலம் கடந்து செய்யப்படும் அறம் பயனில்லாமல் போகும்.

குறள்: 37

அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

பொருள்:

அறத்தை பின்பற்றி வாழ்பவரின் வாழ்க்கை பல்லக்கில் செல்பவரை போல இருக்கும். தீய வழியில் செல்பவரின் வாழ்க்கை பல்லக்கை சுமந்து செல்பவரை போல இருக்கும்.

Thirukkural Adhikaram 4 in Tamil:

குறள்: 38

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

பொருள்:

நாம் மற்றவர்களுக்கு செய்யும் நற்செயல்கள் தான், நம்முடைய வாழ்நாளில் நாம் அனுபவிக்கும் நற்பலன்களுக்கும், தீய பலன்களுக்கும் வழிவகுக்கும்.

குறள்: 39

அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம்
புறத்த புகழும் இல.

பொருள்:

நல்ல செயல்களை செய்து அதன் மூலம் கிடைக்கும் இன்பமும், புகழும் தான் நிலைபெற்றது. மற்ற செயல் மூலம் கிடைக்கும் இன்பங்கள் இன்பம் ஆகாது.

குறள்: 40

செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு
உயற்பாலது ஓரும் பழி.

பொருள்:

அறத்தின் வழியில் செயல்படும் ஒருவரின் வாழ்க்கையில், மற்றவர்களால் பழி நேர்ந்தாலும் அது அவர்களுக்கு உயர்வை தருவதாக அமையும்.

திருக்குறள் அதிகாரம் 9

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Today Useful Information in tamil