டீ மேட் அக்கவுண்ட்
நண்பர்களே அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் இன்று டீமேட் அக்கவுண்ட் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். கரண்ட் அக்கவுண்ட், சேவிங் அக்கவுண்ட் தெரியும் இது என்ன டீ மேட் அக்கவுண்ட் அப்படி என்றால் என்ன என்று கேட்கும் அனைவருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த அக்கவுண்டில் நிறைய நன்மைகள் உள்ளது அதனையும் இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம்.
டீமேட் கணக்கு என்றால் என்ன?
டீமேட் கணக்கு என்றால் பங்கு சந்தையில் முதலீடு செய்ய போகிறீர்கள் என்றால் முக்கியமாக இரண்டு கணக்குகள் தொடங்க வேண்டும். ஒன்று டீமேட் கணக்கு இன்னொன்று ட்ரெண்டிங் கணக்கு தொடங்க வேண்டும். பங்குகளை வாங்கவும், விற்கவும் இந்த இரண்டு வகை கணக்கு தேவை.முன்னிருந்த காலத்தில் பங்கு சந்தையில் ஒரு கம்பெனியின் பங்குகளை வாங்கினால் அதற்கு அடையாளமாக Share Certificate கொடுப்பார்கள். இந்த சான்றிதழ் மிகவும் நன்மையாக இருக்கும். ஆனால் அந்த சான்றிதழ் காகிதத்தில் அச்சடிப்பதால் அதனை மிகவும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அது காணாமல் போகவும் வாய்ப்பு உள்ளது.
ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு தொடங்குவது எப்படி? |
டீமேட் கணக்கு நன்மைகள்:
பங்கு சந்தை கணக்கு இருப்புகளை மின்னணு வடிவில் கணக்கு வைத்துக்கொள்ளும். இதன் மூலம் நீங்கள் வாங்கும் பங்குகள் எவ்வளவு என்ன நாள் வாங்குனீர்கள் என்ன நேரத்தில் வாங்குனீர்கள் என்ற அனைத்தை அந்த டீமேட் கணக்கு இருப்பு வைத்துக்கொள்ளும்.
அதுமட்டுமில்லாமல் இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்கில் (IPO) பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்மென்றால் அதற்கு டீமேட் கணக்கு மிகவும் முக்கியமானது. இதன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். SEBI-யின் வழிகாட்டுதல்களின் படி Dematerialized வாங்கவோ விற்கவோ முடியாது.
IPO என்பதற்கான பொருள் |
நீங்கள் வாங்கும் பங்குகளுக்கு வழங்கும் சான்றிதழை வாங்கி அதனை மின்னனு மூலம் பதிய செய்வார்கள். இதை நீங்கள் வைத்திருக்கும் வங்கி கணக்கு போல் அல்லது locker போலவும் கூறலாம்.
இந்த கணக்கை இந்தியாவில் உள்ள 18 வயது உள்ளவர்கள் மற்றும் கம்பெனிகள், பார்ட்னர்ஷிப் நிறுவனங்கள், டிரஸ்ட்டுகள் என அனைவருமே டீமேட் கணக்கு தொடங்கலாம்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |