பெட்ரோல் போடும் போது போன் பேசினால் அவ்ளோ தான்..!

why we should not use mobile in petrol bunk in tamil

பெட்ரோல் பங்க் விதிமுறைகள்

இன்றைய காலத்தில் போனை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அந்த போனை சாலையில் கடக்கும் போது, பேருந்தில் செல்லும் போது, வீட்டிலிருக்கும் இருக்கும் போது போன்ற நேரங்களில் போனை பயன்படுத்துகின்றனர். ஆனால் இப்படி பயன்படுத்துவது சரியா என்று கேட்டால் முற்றிலும் தவறானது. சாலையை கடக்கும் போது போனை பயன்படுத்தினால் விபத்துகள் தான் நடக்கும். அதேபோல் சாலையில் செல்லும் போதும் சரி போனை பயன்படுத்தாதீர்கள். நீங்கள் கவனித்திருப்பீர்கள் பெட்ரோல் போடும் போது போனை பயன்படுத்தினால் திட்டுவார்கள் போன் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்வார்கள். ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று தெரியுமா.? தெரியவில்லை என்றால் இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ பைக் வைத்திருப்பவர்கள் இனி பெட்ரோல் விலை பத்தி கவலைப்படாதீங்க இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க..!

பெட்ரோல் பங்க் -யில் ஏன் போன் பேச கூடாது.?

பெட்ரோல் போடும் இடத்தில் தீ பிடிப்பதை தொலைக்காட்சி செய்திகள், மற்றும் சமூக வலைத்தளங்களில் பார்த்திருப்பீர்கள். இது எதனால் ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்வோம்.

பெட்ரோல் போடும் போது பெட்ரோலில் உள்ள துகள்கள் காற்றில் வெளிப்படும். அப்போது தீ பிடிக்க வாய்ப்புள்ளது. தீப்பற்ற கூடிய தன்மை காற்றின் அழுத்தம் மற்றும் காற்றின் வேகத்தை பொறுத்து வேறுபடும்.

நமது போன்கள் அனைத்தும் சிறிய  எலெக்டரானிக் பொருட்களால் செய்யப்பட்டது. ஆனால் போனில் இருக்கும் மைக்ரோவேவ் தீப்பற்றக்கூடிய அபாயத்தை ஏற்படுத்த கூடியது.

 நீங்கள் பயன்படுத்தும் போனில் பேட்டரி குறைவான தரத்தை கொண்டதாக இருந்தால் அதனுடன் பெட்ரோல் துகள்கள் கலந்து ஈசியாக தீ பிடித்துவிடும். இந்த பெட்ரோல் துகள்கள் பெட்ரோல் போடும் இடம் இடத்தில் அதிகமாக இருக்கும். ஆகவே தான் பெட்ரோல் போடும் இடத்தில் போன் பேச கூடாது என்று கூறுகிறார்கள். 

போன் பேட்டரி மட்டுமில்லை காரில் உள்ள பேட்டரியும் தரம் குறைந்ததாக இருந்தால்  தீ விபத்து ஏற்படும். முடிந்தவரை தரமான பேட்டரியை பயன்படுத்துங்கள். காருக்கு பெட்ரோல் போடும் போது போனை காருக்குள்ளையே வைத்திருங்கள்.

மேலும் முக்கியமானது பெட்ரோல் போடும் போது போனை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்திடுங்கள். இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்களின் நண்பர்களுக்கும் இந்த பதிவை ஷேர் செய்யுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ இன்று சென்னையில் பெட்ரோல் விலை

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Interesting information