Dial Pad in Tamil
வணக்கம் நண்பர்களே..! அன்றைய காலகட்டத்தை விட இன்றைய காலகட்டம் எவ்வளவோ மாறி இருக்கிறது என்று சொல்லலாம். நாம் வாழும் இந்த உலகம் டிஜிட்டல் உலகமாக மாறி வருகிறது. அதுபோல இன்றைய நிலையில் ஸ்மார்ட் போன் இல்லாத வீடுகளே இருக்க முடியாது. அப்படி நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அந்த வகையில் ஸ்மார்ட் போன் Dial Pad -ல் இருக்கும் Settings உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதை நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Dial Pad Settings in Tamil:
Tricks -1
முதலில் உங்களுடைய போனில் இருக்கும் Dialer Pad -க்குள் செல்ல வேண்டும். பின் அதில் மேலே 3 புள்ளிகள் போன்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
பின் அதில் Speed Dial Number அல்லது Quick Dial என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
பின் அதில் 1 லிருந்து 9 வரை Numbers கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஏதாவது ஒரு நம்பரை கிளிக் செய்ய வேண்டும்.
பின் அதில் உங்கள் போனில் இருக்கும் Contacts தோன்றும். அதில் ஏதாவது ஒரு Contact Number -ஐ கிளிக் செய்ய வேண்டும்.
உதாரணத்திற்கு, நீங்கள் 6 என்ற எண்ணில் உங்கள் அப்பாவின் நம்பரை கிளிக் செய்கிறீர்கள். இப்போது நீங்கள் உங்கள் அப்பாவுக்கு Call செய்ய வேண்டும் என்றால் 6 என்ற எண்ணை Long Press செய்தால் போதும். உங்கள் அப்பாவுக்கு Call போகும்.
இதுபோல நீங்கள் உங்களுக்கு பிடித்தவர்களின் போன் நம்பரை ஏதாவது ஒரு எண்ணில் வைத்து சுலபமான முறையில் அவர்களை தொடர்பு கொள்ள முடியும்.
Mobile Data -வில் உள்ள Tricks பற்றி உங்களுக்கு தெரியுமா..? |
Tricks -2
அதேபோல உங்கள் போனில் இருக்கும் Dialer Pad உள்ளே செல்ல வேண்டும். அதன் மேல் 3 புள்ளிகள் போன்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
பின் Settings என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
அதில் Caller ID and Spam Protection என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அது OFF செய்யப்பட்டிருந்தால் அதை ON செய்து கொள்ளுங்கள்.
இதனால் உங்களுக்கு ஏதாவது Company Calls வந்தால் அது Spam Calls என்று உங்களுக்கு காண்பிக்கும்.
அதுபோல அதன் கீழே Block Spam And Scam Calls என்ற ஆப்சன் இருக்கும். அதை ON செய்ய வேண்டும். இப்படி செய்வதால் அடிக்கடி வரும் Spam calls ஏதும் உங்களுக்கு வராது.
உங்கள் போன் Camera -வில் இருக்கும் இந்த Settings -ஐ உடனே மாத்திடுங்க..! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |