PF Account-ல் PAN Card நம்பரை எவ்வாறு இணைப்பது..? | Pf How to Add Pan Details in EPFO in Tamil
அனைத்து பொதுநலம். காம் நேயர்களுக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒரு அருமையான தகவலை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அப்படி என்ன தகவல் என்றால் PF Account-ல் PAN Card நம்பரை எவ்வாறு இணைப்பது..? என்பதை பற்றி தான். நமது Pf Account-ல் PAN Card நம்பரை இணைப்பது என்பது கட்டாயமாகிவிட்டது.
அதனை எவ்வாறு இணைப்பது என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம். சரிவாங்க பதிவினுள் செல்லாம்.
ஆன்லைனில் EPF கணக்குடன் PANஐ இணைப்பதற்கான படிகள்:
ஸ்டேப் – 1
முதலில் EPFO இணைய பக்கத்திற்கு சென்று அங்கு உங்களின் UAN மற்றும் Password-ஐ பயன்படுத்தி இணைய முகப்பினுள் செல்லவும்.
ஸ்டேப் – 2
அடுத்து மெயின் மெனு பாரில் உள்ள Mange என்பதை Click செய்து அதன் கீழே வரக்கூடிய KYC என்பதை Click செய்து உள்ளே செல்லுங்கள்.
ஸ்டேப் – 3
அடுத்து KYC பக்கத்தினுள் செல்லும் அப்பொழுது அங்கு உள்ள ஆவண வகை (Document type) என்பதை Click செய்தால் நீங்கள் Pf-வுடன் லிங்க் செய்யவேண்டிய ஆவணங்களின் பட்டியலை காண்பிக்கும்.
ஸ்டேப் – 4
அதில் PAN என்பதை Click செய்து அதில் உங்களின் PAN எண் மற்றும் பெயரை உள்ளீடு செய்து பின்பு Save என்பதை Click செய்யுங்கள்.
நீங்கள் உள்ளீடு செய்த உங்கள் பெயர் மற்றும் PAN எண் போன்ற விவரங்கள் சரியாக இருந்தால், அவை தானாகவே வருமான வரித் துறையினரால் சரிபார்க்கப்பட்டு, உங்கள் EPF கணக்குடன் உங்கள் PAN இணைக்கப்படும்.
உங்கள் EPF கணக்குடன் உங்கள் PAN வெற்றிகரமாக இணைக்கப்பட்ட பிறகு உங்களின் EPFO இணைய முகப்புப் பக்கத்தில் Manage Profile tab-ன் கீழ் நீங்கள் அதற்கான தகவலை (Alert Message)- ஐ காணலாம்.
இதையும் படியுங்கள் => ஆன்லைன் மூலம் PF பணம் பெறுவது எப்படி?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |