போன் Lock Screen -ல இவ்வளவு Tricks இருக்கா..? இத்தனை நாளா இத தெரிஞ்சிக்காம தான் இருந்தோமா..?

Lock Screen Tricks in Tamil

இன்றைய பதிவில் ஸ்மார்ட் போன் Lock Screen -இல் இருக்கும் Tricks பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். தினமும் இந்த பதிவில் ஸ்மார்ட் போனில் இருக்கும் Settings மற்றும் Tricks பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அனைத்து ஸ்மார்ட் போனிலும் Lock Screen என்ற ஆப்சன் இருக்கும். அதில் இருக்கும் ட்ரிக்ஸ் உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Lock Screen Settings in Tamil:  

Tricks -1

Lock Screen

முதலில் உங்களுடைய போனில் இருக்கும் Settings என்ற ஆப்சன் உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் Lock Screen என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்து  கொள்ளுங்கள்.

Raise To Wake

அதில் பல ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Raise To Wake என்ற ஆப்ஷன் இருக்கும். அது OFF செய்யப்பட்டிருந்தால் அதை ON செய்து கொள்ளுங்கள்.

 இந்த ஆப்ஷனை ON செய்வதால் உங்கள் போனை நீங்கள் எடுத்தவுடனே போன் ஆன் ஆகிவிடும். அதாவது நீங்கள் போனை தொட்டவுடன் பட்டனை On செய்யாமலே உங்கள் போன் Screen ஓபன் ஆகிவிடும்.  
உங்க போன் Display -ல இருக்கும் Tricks பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Tricks -2 

Double Tap To Wake Or Turn Off Screen

அடுத்து உங்கள் போன் Lock Screen Settings -ல் மூன்றாவதாக இருக்கும் Double Tap To Wake Or Turn Off Screen என்ற ஆப்சன் இருக்கும். அந்த ஆப்ஷனை ON செய்து கொள்ளுங்கள்.

 இந்த ஆப்ஷனை ON செய்வதால் உங்கள் போனை ஓபன் செய்வதற்கு Power Button -ஐ அழுத்த தேவையில்லை. உங்கள் போன் Screen -யை 2 முறை கிளிக் செய்தால் போன் Screen ஓபன் ஆகிவிடும். அதாவது உங்கள் போன் Screen -யை 2 முறை கிளிக் செய்து On செய்யவும் முடியும். OFF செய்யவும் முடியும்.  
உங்க மொபைலில் இந்த Settings -யை மட்டும் மாத்திடுங்க..!

Tricks -3 

Launch Camera

மேல் கூறியது போல உங்கள் போனில் Lock Screen Settings உள்ளே செல்லுங்கள். பின் அதில் கீழே நகர்த்தி சென்றால் Launch Camera என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும்.

அந்த ஆப்சன் OFF செய்யப்பட்டிருந்தால் அதை ON செய்து கொள்ளுங்கள். இதனால்  உங்கள் போன் Lock Screen இல் இருக்கும் போது Volume Button -ஐ 2 முறை அழுத்தினால் கேமரா ஓபன் ஆகிவிடும். இதனால் நீங்கள் கேமராவை Lock Screen -ல் இருந்தே பயன்படுத்தி கொள்ள முடியும்.  

இந்த Settings-யை மட்டும் மாத்திடுங்க..! Ads தொல்லையே இருக்காது..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News