பிஃபிலாக் மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் | Bifilac Tablet Uses and Side Effects in Tamil
ஏதாவது உடல் சார்ந்த பிரச்சனையாக இருந்தால்.. உடனே நாம் மருத்துவரை தான் அணுகுகிறோம். அப்படி அணுகும் போது மருத்துவர்கள் அந்த பிரச்சனைக்கான மருந்து மாத்திரைகளை பரிந்துரைக்கின்றன. நாமும் அந்த பிரச்சனை சரியாக மாத்திரையை எடுத்துக்கொள்கிறோம். அப்படி நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளும் நமது உடலில் சில சமயம் சில பக்கவிளைவுகளை ஏற்படும். ஆக நாம் உடல் சார்ந்த எந்த ஒரு பிரச்சனைக்காகவும் எடுத்துக்கொள்ளும் மாத்திரையின் நன்மை மற்றும் தீமைகளை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று நாம் பிஃபிலாக் மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் (Bifilac Tablet Uses and Side Effects) பற்றி அறியலாம் வாங்க.
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாகவே பயன்படுத்த கூடாது.
பயன்கள் – Bifilac Tablet Uses in Tamil:
இந்த பிஃபிலாக் மாத்திரை பொதுவாக இரைப்பை குடல் கோளாறுகள், பாக்டீரியா தொற்றுகள், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றின் கண்டறிதல் அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.
- இரைப்பைக் கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
- குடல் அசௌகரியத்திற்கு நிவாரணம் அளிக்கிறது
- குடல் கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
- பாக்டீரியா தொற்றுகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்கிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 பெப்லக்ஸ் ஃபோர்ட்டே மாத்திரை பயன்கள்
இந்த மாத்திரையை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்:
பிஃபிலாக் மாத்திரை மருந்தை உணவுடனோ அல்லது இல்லாமலோ எடுத்துக் கொள்ளலாம். வயிற்றில் கோளாறு ஏற்பட்டால் மருந்தை உணவுடன் உட்கொள்ள வேண்டும்.
இந்த Bifilac Tablet-ஐ யாரோ ஒருவர் பயன்படுத்தியதை கேட்டு இந்த மருந்தை உட்கொள்ள வேண்டாம். மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
பக்கவிளைவுகள் – Bifilac Tablet Side Effects in Tamil:
பிஃபிலாக் மாத்திரை உட்கொள்வது சில சமயங்களில் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் அவை என்னென்ன என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
- சொறி
- குமட்டல்
- வயிற்று வலி
- வாயு
- தோல் வெடிப்பு
- மயக்கம்
- தலைவலி
இதுபோன்ற பக்கவிளைவுகள் ஏற்படும். ஆக இந்த மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வாங்கி பயன்படுத்தக் கூடாது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 ஸ்டீராய்டு மாத்திரைகள் பக்க விளைவுகள்
இது போன்ற மருந்து சார்ந்த பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | மருந்து |