மூச்சி பிடிப்பு, முதுகு வலி போன்ற பிரச்சனைகள் உடனே சரியாக இதை மட்டும் செய்யுங்கள்

moochu pidippu enna seiya vendum

இடுப்பில் மூச்சு பிடிப்பு

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் அருமையான ஒரு வீட்டு வைத்தியம் பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். அதாவது பொதுவாக எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் இடுப்பில் மூச்சு பிடித்து கொள்வதும் ஒரு பிரச்சனையாக இருக்கிறது, இவை பெரும்பாலும், அதிகமான சுமைகளை தூக்குவதினால் ஏற்படும் ஒரு பிரச்சனையாகும். இது போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கான ஒரு சிலர் வலி தாங்க முடியாமல் மருத்துவமனைக்கு செல்வார்கள்.  ஆனால் இது போன்ற பிரச்சனைகளை வீட்டிலே சரி செய்யலாம், மேலும் அவற்றை எப்படி சரி செய்வது என்று நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாங்க.

இதையும் படியுங்கள்👇

மூச்சு பிடிப்பு நீங்க பாட்டி வைத்தியம்

மூச்சு பிடிப்பு எதனால் வருகிறது.?

மூச்சி பிடிப்பானது பொதுவாக அதிகமான சுமைகளை கஷ்டப்பட்டு தூக்கும் பொழுது இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இன்னும் ஒரு சிலருக்கு மார்பு எலும்புகளில் இருக்கும்  தசையின் நாறுகளில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் மூச்சுப்பிடிப்பு ஏற்படும். மேலும்  சளி பிரச்சனை, இருமல் மற்றும் செரிமான பிரச்சனைகள் இருந்தாலும், மூச்சு பிடிப்பு பிரச்சனைகள் ஏற்படும்.

முதுகில் மூச்சு பிடிப்பு நீங்க:

தேவையான பொருட்கள்:

  1. சாதம் வடித்த கஞ்சி- 3 ஸ்பூன் 
  2. சுக்கு பொடி- 1 ஸ்பூன்
  3. பெருங்காயத்தூள்-1 ஸ்பூன் 
  4. கற்பூரம்-1 

செய்முறை:

ஸ்டேப்:1

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொண்டு, அதில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் சுக்கு பொடி- 1 ஸ்பூன்,
பெருங்காயத் தூள்-1 ஸ்பூன், சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும்.

ஸ்டேப்:2

பிறகு நாம் கலக்கி வைத்த கிண்ணத்தில், ஒரு கெட்டியான கற்பூரத்தை எடுத்து, அதை கையால் பொடியாக்கி, அந்த கிண்ணத்தில் சேர்க்க வேண்டும். நாம் எடுத்து வைத்த நான்கு பொருளையும் கிண்ணத்தில் சேர்த்த பிறகு, அதை நன்றாக கலந்துவிட வேண்டும்.

ஸ்டேப்:3

அடுத்ததாக அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, நாம்  கலந்து வைத்த கலவையை, ஒரு குளிக்கரண்டியில் சேர்த்து, அடுப்பில் எறியும் நெருப்பில் மேலோட்டமாக காட்ட வேண்டும்.  ஒரு 5 நிமிடம் காட்டிய பிறகு, அடுப்பை அணைக்கவும். இப்பொழுது  மருந்து தயார்.

மருந்தை பயன்படுத்தும் முறை  மற்றும் பயன்கள்:

நாம் தயார் செய்த மருந்தை மிதமான சூட்டில் இருக்கும் பொழுதே, மூச்சுப்பிடிப்பு ஏற்பட்டிருக்கும் பகுதியில் அழுத்தி தடவ வேண்டும். பிறகு  அரை மணி நேரம் கழித்து நீங்கள் துடைத்துக் கொள்ளலாம்.

இந்த மருந்தில் நாம் பயன்படுத்திய,  சாதத்தின் கஞ்சி ஆனது, முதுகு பகுதியில் இருக்கும் சதையை இழுத்து பிடித்து, மூச்சுப்பிடிப்பை சரி செய்ய உதவியாக இருக்கின்றது. இதனை நீங்கள் மூச்சி பிடிப்பு பிரச்சனைகள் ஏற்படும் பொழுது, இந்த மருந்தை பயன்படுத்தி வந்தால், 5 அல்லது 10 நிமிடத்தில் வலி நின்றுவிடும். 

இதையும் படியுங்கள்👇

முதுகு வலி குணமாக பாட்டி வைத்தியம்..!
குதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil