இந்தியாவில் யாரும் முயற்சிக்காத தொழில்..! 2023 ஆம் ஆண்டில் இந்த தொழிலை தொடங்கினால் நீங்கள் தான் தொழிலதிபர்..!

Lithium Ion Battery Business in Tamil

Best Business Ideas in Tamil

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கட்டாயம் ஒரு தொழில் தேவை. தொழிலாளியாக இருக்கும் அனைவருக்குமே முதலாளியாக மாறவேண்டும் என்ற ஆசை இருக்கும். தன்னுடைய சொந்த காலில் ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் பல பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவின் மூலம் ஒரு சிறந்த தொழிலை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Lithium Ion Battery in Tamil:

lithium ion battery in tamil

Lithium Ion Battery என்பது குறைந்த எடையும் அதிக ஆற்றலும் கொண்டு நீடித்து உழைக்கக் கூடிய ஒரு மின்கலன் என்று சொல்லப்படுகிறது. இந்த பேட்டரி நவீனமானது என்றும் தூய்மையானது என்றும் கூறப்படுகிறது.

 இதன் செயல் திறன் 3 அல்லது 4 மடங்கு ஆற்றல் அடர்த்தியை கொண்டுள்ளது. இந்த லித்தியம் அயன் பேட்டரி நீண்ட சுழற்சி ஆயுளைக் கொண்டு செயல்படுகிறது.  

ஒரு லித்தியம் அயன் பேட்டரியானது அனோட், கேத்தோடு, பிரிப்பான், எலக்ட்ரோலைட் மற்றும் தற்போதைய சேகரிப்பான்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பேட்டரி இன்றைய நிலையில் ஆற்றல் சேமிப்பு மற்றும் மின்சார வாகனங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கட்டம், சார்ஜர், இன்வெர்ட்டர் மற்றும் சோலார் பேனல் மூலம் சார்ஜ் செய்யக்கூடியது. லித்தியம் பேட்டரியின் வாழ்நாளில் 2000 முறை சார்ஜ் அல்லது டிஸ்சார்ஜ் செய்ய முடியும்.

இந்த  லித்தியம் பேட்டரி சார்ஜிங் நேரம் 4 மணி நேரம் ஆகும். இந்த லித்தியம் அயன் பேட்டரி 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை உத்தரவாதத்துடன் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பேட்டரியின் ஆயுள் காலம் 10 ஆண்டுகள் வரை இருக்கும்.  

எப்பொழுதும் Demand உள்ள இந்த தொழிலை தொடங்கி பாருங்க..! தினமும் அதிக லாபம் தான்..!

Lithium Ion Battery Business in Tamil:

Lithium Ion Battery

ஸ்மார்ட் போன்களில் தொடங்கி மின்சார கார்கள், வீட்டு ஆற்றல் சேமிப்பு சாதனங்கள் வரை அனைத்து மின் சாதனங்களுக்கும் Lithium Ion Battery பயன்பட்டு வருகிறது.

இந்தியாவின் லித்தியம் அயன் பேட்டரி தேவை தற்போதைய நிலையில் 2023 ஆம் ஆண்டில் 3 GWhல் இருந்து 2026 ஆம் ஆண்டில் 20 GWh ஆக உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேபோல, 2030 ஆம் ஆண்டுக்குள் 70 GWh ஆக உயரும் என்று தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள். மேலும் வருங்காலத்தில் நம் இந்தியா லித்தியம் பேட்டரி துறையில் முன்னணியில் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த தொழில் தொடங்குவதற்கு 1 லட்சம் வரை முதலீடு தேவைப்படும். இந்த பேட்டரியை ஏற்றுமதி செய்வதற்கான செலவுகளையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அடுத்து சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ ஒரு கடை இருக்க வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் இந்த தொழிலை தொடங்க முடியும்.

நீங்கள் பேட்டரி உற்பத்தியாளர்களுடன் டீலர்ஷிப் வைத்து இந்த தொழிலை தொடங்கினால் நல்ல லாபம் பார்க்கலாம். பேட்டரி பிராண்டின் விற்பனை உரிமம் மற்றும் தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெற்ற பிறகு இந்த தொழில் தொடங்குவது நல்லது.

இந்த அயன் பேட்டரி ஒரு முக்கிய வணிகப் பொருளாக விளங்குவதால், கண்டிப்பாக மக்கள் பேட்டரிகளை வாங்க சில்லறை விற்பனை கடைக்கு தான் வர வேண்டும்.

அதனால் இந்த தொழில் தொடங்கினால் நீங்களும் வாழ்க்கையில் கொடிகட்டி பறக்கலாம். அதுபோல இந்த தொழிலை தொடங்கி பாருங்கள் நீங்கள் தான் அடுத்த தொழிலதிபர்.

இன்று இல்லை நாளை இல்லை என்றுமே மக்களிடையே Demand உள்ள தொழில்..!

 

இதையும் படியுங்கள் ⇒ இந்த தொழில் செய்ய ஓடவும் வேண்டாம்..! அலையவும் வேண்டாம்..! லாபம் உங்களை தேடி வரும்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil