Mint Oil Manufacturing Business in Tamil
இன்றைய கால கட்டத்தில் பணம் இல்லாதவர்களே இந்த சமுதாயம் ஒரு மனிதனாக கூட மதிப்பதில்லை. அதனால் நாமும் அதிக அளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும். அதனால் ஏதாவது ஒரு சுயதொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் திட்டமும் நமது மனதில் இருக்கும். அப்படி உங்களின் மனதிலேயும் இந்த மாதிரியான திட்டமும், எண்ணமும் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
ஆம் நண்பர்களே நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான மற்றும் எளிமையான சுயதொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் Mint Essential தயாரிக்கும் தொழில் பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Mint Essential எண்ணெய் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களின் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Mint Essential Oil Making Business Paln in Tamil:
இந்த புதினா எண்ணெய் பல வகையான அழகு சாதன பொருட்கள் தயாரிக்க ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது. மேலும் இந்த எண்ணெயை தங்களின் அழகினை மேம்படுத்தி அப்படியேயும் பயன்படுத்துகிறார்கள். அதனால் நீங்கள் இந்த எண்ணையை தயாரித்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.
தேவையான மூலப்பொருட்கள்:
இந்த தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள புதினா, Essential Oil Extraction Machine, கண்ணாடி பாட்டில்கள் மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ சாதாரண தொழில் தான் ஆனால் தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
தேவையான முதலீடு:
1 கிலோ புதினாவின் விலை தோராயமாக 92 ரூபாய், Essential Oil Extraction Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை தோராயமாக 50,000 ரூபாய் ஆகும்.
அதே போல் Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை 1,000 ரூபாய் ஆகும். கண்ணாடி பாட்டிலின் விலை தோராயமாக 10 ரூபாய் ஆகும்.
தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:
நீங்கள் தயாரித்து வைத்துள்ள புதினா எண்ணெயினை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான 100 sq.ft இடம் இருந்தால் மட்டுமே போதும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ சும்மா தூக்கி போடுற பொருளை பயன்படுத்தி தினமும் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
தயாரிக்கும் முறை:
முதலில் நாம் வாங்கி வைத்துள்ள நல்ல நிலையில் உள்ள புதினா இலைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை Essential Oil Extraction Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு எண்ணெயை தயாரித்து தந்து விடும்.
பிறகு அதனை நன்கு வடிகட்டி நாம் வாங்கி வைத்துள்ள கண்ணாடி பாட்டில்களில் ஊற்றி Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.
விற்பனை செய்யும் முறை:
நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள புதினா எண்ணையை எண்ணெய் கடைகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் அல்லது விற்பனை செய்யும் இடங்கள் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.
அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ தினமும் 4 மணிநேரம் வேலை செய்தால் போதும் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
வருமானம்:
தோராயமாக 100 மி.லி புதினா எண்ணெயின் விலை 2,700 ரூபாய் முதல் 3,000 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது என்றால், 1 லிட்டர் புதினா எண்ணெயின் விலை 27,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது.
அதனால் ஒரு நாளைக்கு நீங்கள் ஒரே ஒரு லிட்டர் புதினா எண்ணையினை விற்றாலே தோராயமாக 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
அதனால் இந்த புதினா எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |