வீட்டில் இருந்து செய்யக்கூடிய தொழில் தான்..! ஆனால் வாரம் 22,400 வரை வருமானம் பெறலாம்..!

mustard oil business ideas in tamil

சுயதொழில் என்ன செய்யலாம்

உங்களுடைய வீட்டிற்கு அருகில் உள்ள அக்கம் பக்கத்தினர் சுயதொழில் செய்கிறார்கள் உங்களுக்கு என்ன சுயதொழில் என்று தெரியவில்லை என நீங்கள் கவலைப்பட வேண்டாம். வீட்டில் இருந்தே நீங்களும் சுயதொழில் செய்து நீங்கள் எதிர்பார்த்த மாதிரியான வருமானம் பெறுவதற்கு இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் உதவியானதாக இருக்கும். இன்று மட்டும் இல்லாமல் என்றும் அதிக டிமாண்ட் உள்ள ஒரு தொழிலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த தொழிலை மட்டும் நீங்கள் செய்தால் போதும் வாரத்திற்கு 22,400 வரை மிகவும் எளிமையாக நீங்கள் வருமானம் பெறலாம். அப்படி என்ன தொழில் என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். உங்களுடைய ஆவலிற்கு பதிவை தொடர்ந்து படித்து பாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

அதிக லாபம் தரும் தொழில்:

வீட்டில் இருந்தே அதிக லாபம் பெறக்கூடிய Mustard Oil Business -யை பற்றி தான் பார்க்கப்போகிறோம். இந்த தொழில் எப்போதும் அதிக டிமாண்ட் உள்ள ஒரு சிறந்த தொழிலாக இருக்கிறது.

இந்த Mustard Oil ஒமேகா-3 பவர் இருப்பதால் இது கொலஸ்ட்ரால் அளவினை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும், சரும பிரச்சனைக்கும் மற்றும் தலைமுடி பிரச்சனைக்கு நல்ல பலனை தரும் ஒரு எண்ணெயாக இருக்கிறது.

அதனால் இந்த எண்ணெயை மருத்துவர்கள் அதிக அளவு மக்களுக்கு பரிந்துரை செய்கின்றனர்.

முதலீடு:

இந்த தொழிலை நீங்கள் தொடங்குவதற்கு வீட்டில் ஒரு பெரிய அளவிலான இடம் மின்சார வசதியுடன் வேண்டும். Mustard Oil Business– யை தொடங்குவதற்கு தோராயமாக 90,000 வரை முதலீடு தேவைப்படும்.

மூலப்பொருள்:

அதிக லாபம் தரும் தொழில்

  • Mustard (கடுகு)
  • Dust Removal Machine– ஆரம்ப விலை 10,000
  • Automatic Oil Machine– ஆரம்ப விலை 60,000
  • பாட்டில்கள் 

மேலே சொல்லப்பட்டுள்ள மிஷின்கள் அதன் மாடலை பொறுத்து மாறுபடும். அதுமட்டும் இல்லாமல் இந்த தொழிலை தொடங்குவதற்கு முன்பு Fssai License, GST Registration, Trade License மற்றும் Agmark Certificate போன்ற ஆவணங்களை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

நீங்கள் மிஷின் வாங்கும் இடங்களில் அதனை எப்படி Opearte செய்வது என்று அதற்கான பயிற்சி அளிக்கப்படும்.

                    இதையும் படியுங்கள்👉👉  புதிய வருடத்தில் நல்ல தொழிலை செய்து முன்னேறுவதற்கு என்றும் முதலிடத்தில் உள்ள இந்த தொழிலை செய்தால் போதும்..!

How to Start Mustard Oil Business:

 

முதலில் நீங்கள் வாங்கி வைத்துள்ள Mustard -யை 3 நாட்கள் வரை வெயிலில் நன்றாக காய வைத்து விடுங்கள்.

3 நாட்கள் களித்த காயவைத்து எடுத்துவைத்துள்ள Mustard -யை Dust Removal Machine– ல் போட்டு கடுகில் இருக்கும் தூசி மற்றும் கல் இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு Automatic Oil Machine- ல் தூசி இல்லாமல் சுத்தம் செய்து வைத்துள்ள கடுகினை அதில் போட்டால் போதும் உங்களுக்கு Mustard Oil தயாராகிவிடும்.

பேக்கிங் செய்தல்:

நீங்கள் தயாரித்து வைத்துள்ள Mustard Oil- லை 100 மில்லி, 1/2 லிட்டர் மற்றும் 1 லிட்டர் பாட்டில்களில் நிரப்பி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:

 how to start mustard oil business in tamil

100 கிராம் கடுகு எண்ணெயின் தோராய விலை 20 ரூபாயும், 1/2 லிட்டரின் விலை 100 ரூபாயும் மற்றும் 1 லிட்டர் 200 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு நாளைக்கு நீங்கள் 100 மில்லி எண்ணெயில் 10-யும், 1/2 லிட்டர் எண்ணெயில் 10-யும் மற்றும் 1 லிட்டரில் 10-யும் தோராயமாக விற்பனை செய்தீர்கள் என்றால் 3,200 ரூபாய் ஒரு வாரத்திற்கு 22,400 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்க முடியும்.

நீங்கள் தயாரித்த Mustard Oil- லை பெரிய மற்றும் சிறிய மளிகை கடை, Department Store, மெடிக்கல் ஷாப், நாட்டு மருந்து கடை, Wholesale Shop ஆகிய இடங்களிலும் மற்றும் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம்.

இதையும் படியுங்கள்⇒ விளம்பரம் செய்தால் மட்டும் போதும்..! பணத்தை வீட்டிலிருந்து சம்பாதிக்கலாம்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil