வீட்டிலிருந்து 3 மணி நேரம்..! அருமையாக சம்பாதிக்க கூடிய தொழில்..!

3 hours part time job in tamil 3 hours part time job in tamil

தினமும் 1000 ரூபாய் சம்பாதிக்க

நண்பர்களே வணக்கம் இன்றைய வியாபாரம் பதிவில் ஒரு நாளுக்கு 1000 ரூபாய் சம்பாதிக்கும் தொழிலை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக நிறைய தொழில்களை பற்றி உங்களுக்கு தெரிய படுத்துவதில் Pothunalam.com மிற்கு மிக்க மகிழ்ச்சி. நிறைய வகையாக தொழில்கள் உள்ளது. அதில் உங்களால் செய்ய கூடிய தொழிலை செய்து சம்பாதிக்க ஆரம்பித்து விடுங்கள். என்றால் காலம் எப்போது எப்படி மாறும் என்றும் தெரியவில்லை ஆகவே இப்போதே சம்பாதித்துக்கொள்வது ஓரளவிற்கு நல்லது.

தொழில்களை தெரிந்துகொள்ள👉 கைநிறைய சம்பாதிக்க கூடிய தொழில்கள் 

3 Hours Part Time Job in Tamil:

பொதுவாக இந்த தொழில்களை அனைத்தையும் செய்வதற்கு நீங்கள் முதலில் நிறைய மொத்த வியாபாரிகளிடம்  செல்லவேண்டும். அதற்கு முதலில் கொஞ்சம் உழைத்தால் போதும்.

முதலில் அனைத்து மொத்த வியாபாரிகளிடம் சென்று அவர்களிடம் உங்களுக்கு தேவையான பொருட்களை பேக்கிங் செய்து தருகிறோம் என்று சொல்லி அவர்களிடம் ஒரு டீலர் ஷிப் எடுக்கவேண்டும்

அதன் பின் அவர்களிடம் மொத்தம் எத்தனை பொருட்கள் என்று ஒரு கணக்கு எடுத்துக்கொள்ளவும் அதன் பின் அவர்களிடம் ஒரு 10 பொருட்கள் பேக்கிங் செய்ய வாங்கினால் ஒரு பேக்கிங்க்கு எவ்வளவு ரூபாய் என்றும் அல்லது 100 பாக்கெட் என்றால் எவ்வளவு என்றும் ஒரு கணக்கு போட்டுக்கொள்ளவும்.

சில கடைங்களில் 100 பாக்கெட் என்று சொல்வார்கள் சில கடைகளில் மொத்தம் எவ்வளவு என்றும் சொல்வார்கள்.

சில கடைகளில் 1 பாக்கெட்டுக்கு 3 ரூபாய் என்று சொல்வார்கள். மூன்று ரூபாய் என்றால் மொத்தமாக ஒரு நாளுக்கு குறைந்தது 1,000 பாக்கெட் போட்டால் 3,000 ரூபாய் கிடைக்கும்.

நான் சொல்வது நீங்கள் வாங்கும் ஒரு பொருட்களை 1,000 பாக்கெட் போட்டால் எவ்வளவு கிடைக்கும் என்பது தான் சொல்கிறேன்.

அதுவே நீங்கள் நிறைய கடைகளில் மொத்தமாக வாங்கி வந்து 2, 3 ஆட்களை கொண்டு பேக்கிங் செய்துகொடுத்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்.

உங்களால் கடைகளுக்கு செல்ல முடியவில்லை என்றால் மொத்தமாக பொருட்களை முதலீடு போட்டு வாங்கி வந்து அதற்கு தேவையான பொருட்களை கொண்டு அதாவது பேங்க்கிங் கவர், ஸ்லிங் மிஷின், எந்த பொருட்களை போட வேண்டும் என்று நினைத்தாலும்

அதாவது   உதாரணத்திற்கு மிளகு, வெந்தயம், மிளகாய், கடுகு, போன்ற சில்லறை பொருட்கள் வாங்கி பாக்கெட் செய்து கொடுக்கலாம்.

இதற்கும் ஒரு 100 பாக்கெட் போட்டால் அதிலும் நல்ல லாபம் பார்க்க முடியும். இது சின்ன தொழிளாக இருந்தாலும் இதில் கொஞ்ச நாட்கள் செய்தால் இதற்கு நீங்கள் மட்டுமே ராஜாவாக இருக்க முடியும்.

சின்ன இடம் இருந்தால் வீட்டில் இருந்து தினமும்​ 3500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022