Toys Business Plan
சொந்தமாக தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று அனைவரும் நினைக்கின்றனர். அந்த வகையில் இன்றைய பதிவில் எப்பொழுதும் Demand இருக்கும் தொழிலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அது என்ன தொழில் என்று தானே என்று யோசிக்கிறீர்கள்.! குழந்தைக்ளுக்கு தேவைப்படுகின்ற Toys தொழில் பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். லாபகரமான தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதவு பயனுள்ளதாக இருக்கும். மேலும் குறைந்த முதலீட்டில் கூட இந்த தொழிலை தொடங்கலாம். வாங்க இந்த தொழில் எப்படி செய்வது என்று படித்து தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
How to Start a Toy Business in India:
இடம்:
இந்த தொழிலை செய்வதற்கு ஒரு கடையை வாடகைக்கு எடுக்கலாம். அல்லது சொந்தமாகவும் கட்டலாம். ஆனால் நீங்கள் வாடகைக்கு பார்த்தாலும் சரி, சொந்தமாக பார்த்தாலும் சரி MAIN ஆன இடமாக இருத்தல் வேண்டும். பேருந்து நிலையம், பள்ளி போன்று மக்கள் கூட்டம் அதிகமாக இருக்க கூடிய இடமாக பார்த்து வைக்க வேண்டும்.
மூலப்பொருட்கள்:
இந்த தொழிலுக்கு மூலப்பொருள் என்று பார்த்தால் பொம்மைகள் தான். பொம்மைகளில் நிறைய வகைகள் உள்ளது. மர பொம்மை, Electric Toys , Education Toys என்று பல வகைகள் உள்ளது. இந்த விளையாட்டு பொம்மைகளை வாங்கி கொள்ளவும்.
இதையும் படியுங்கள் ⇒ கை நிறைய சம்பாதிக்க அருமையான தொழில்..!
முதலீடு:
இந்த தொழிலுக்கு நீங்கள் எப்படி கடை வைக்க போகிறீர்களோ அதை பொறுத்து முதலீடு மாறுபடும். எடுத்துக்காட்டுக்கு, பெரிய கடையாக வைக்க போகிறீர்கள் என்றால் 5 லட்சம் தேவைப்படும். அதுவே சிறிய கடையாக வைக்க போகிறீர்கள் என்றால் 50,000 ரூபாய் தேவைப்படும்.
இந்த முதலீடு என்னால் போட முடியாது என்றால் தள்ளுவண்டியை வாங்கி கொள்ளுங்கள். அதில் பொம்மைகளை வாங்கி வைத்து பள்ளி, பீச், திருவிழா, பேருந்து நிலையம் போன்ற இடங்களுக்கு சென்று விற்பனை செய்யலாம்.
வருமானம்:
நீங்கள் கடை வைத்திருக்கும் இடத்தை பொறுத்து வருமானம் பெறலாம். நீங்கள் வாங்கிய பொம்மைகளை 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை லாபம் வைத்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். தோராயமாக ஒரு நாளிற்கு 2000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம்.
இதையும் படியுங்கள் ⇒ எக்காலத்திலும் அழியாத தொழிலை செய்து முதலாளியாக மாறுங்கள்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |