தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு தமிழ்நாடு காவல் துறையில் 50000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!

TN Police Recruitment 2023

தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு தமிழ்நாடு காவல் துறையில் 50000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு..! TN Police Recruitment 2023

TN Police Recruitment 2023 – தமிழ்நாடு அரசு காவல் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி குதிரை பராமரிப்பாளர் பணிக்கு மொத்தம் 10 காலியிடங்கள் நிரப்பட உள்ளது. இந்த வேலைவாப்பிற்கு ஆண்களிடமிருந்து மட்டுமே பயன்பெற முடியும். எனவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே ஆர்வமுள்ளோர் 03.04.2023 அன்று அல்லது அதற்கு முன்பு தங்களுடைய விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்ட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதி போன்றவற்றை பூர்த்தி செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு காவல் துறை அறிவித்துள்ள இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு நேர்காணல் நேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழுமையான விவரங்களுக்கு tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இனையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

தமிழ்நாடு அரசு காவல் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம்:

நிறுவும் தமிழ்நாடு அரசு காவல் துறை
பணி குதிரை பராமரிப்பாளர்
பணியிடம் தமிழ்நாடு
மொத்த காலியிடங்கள் 10
சம்பளம் புதிய ஊதியப்படை நிலை (1.1) ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடை நாள் 03.04.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் tn.gov.in

கல்வி தகுதி:

 • தமிழ் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது தகுதி:

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் ஆகும்.

விண்ணப்பத்திரர்களின் அதிகபட்ச வயது பொறுத்தவரை:

 • இதர பிரிவினருக்கு 30 ஆண்டுகள்.
 • பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 32 ஆண்டுகள்.
 • பழங்குடியினர், ஆதிதிராவிடர், அருந்ததியினர் ஆகியவர்களுக்கு 35 ஆண்டுகள் ஆகும்.

விண்ணப்ப முறை:

 • அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

குதிரை பராமரிப்பாளர் விண்ணப்பம், காவல் ஆணையாளர் அலுவலகம், சென்னை பெருநகர காவல், வேப்பேரி, சென்னை 7.

விண்ணப்பதாரர்கள் அவரவர் அசல் சான்றிதழ்களை சரிபார்க்கும் நாள் மற்றும் இடம்:

 • நாள்: 17.04.2023
 • நேரம்: காலை 7 மணி 
 • இடம்: ராஜராத்திரனம் விளையாட்டு அரங்கம், ருக்குமணி இலட்சுமிபதி சாலை (மார்ஷல் சாலை), எழும்பூர், சென்னை-8.

குறிப்பு:

 1. ஒரு வெள்ளைத் தாளில் விளம்பரத்தில் அளிக்கப்பட்டுள்ள மாதிரி படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பம் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.
 2. 17. 04.2023 அன்று சான்றிதழ் சரிபார்க்க ஆஜராக வேண்டும். இல்லையென்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மீண்டும் உரிமை கோர இயலாது.
 3. இப்பணிக்கு தேர்வாகும் பட்சத்தில், பணி நிமித்தமாக அவ்வப்போது உருவாக்கப்படும் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பணிபுரிய வேண்டும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM
DOWNLOAD HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு அரசு காவல் துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இன்றைய வேலூர் மாவட்ட செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil 2023