வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நாய் பற்றிய 10 வரிகள் தமிழ்

Updated On: October 9, 2024 3:58 PM
Follow Us:
10 Lines About Dog in Tamil
---Advertisement---
Advertisement

10 Lines About Dog in Tamil | நாய் பற்றிய 10 வரிகள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நாய்கள் பற்றி 10 வரிகளில் தெரிந்துகொள்ளலாம். வீட்டில் வளர்க்கப்படும்  விலங்குகளில் முக்கியமானதாகவும் முதன்மையானதாகவும் இருப்பது நாய்கள் தான். நாய்கள் பல்வேறு பயன்பாட்டிற்காக வளர்க்கப்படுகிறது. அவற்றில் முதல் விஷயம் காவல் என்றே கூறலாம். பெரும்பாலும், நாய்கள் வீட்டின் காவலுக்காக வளர்க்கப்படுகிறது. அதற்கு அடுத்தக்கதாக செல்ல பிராணியாக வளர்க்கப்படுகிறது.

நாய்கள் பற்றியுள்ள ஜீவன் என்று கூறுவார்கள். மனிதனை விட நாய்களுக்கு பாசமும், நன்றியும் அதிகம். வளத்தவர்கள் மீது என்றும் நன்றியுடன் இருக்கும். இதனால் தான் நாய்க்கு இருக்கும் அறிவு கூட ஒரு சில மனிதர்களுக்கு இருப்பதில்லை என்று கூறுவார்கள். ஓகே வாருங்கள் நாய்கள் பற்றிய 10 வரிகள் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

நாய்களுக்கு எந்தந்த மாதத்தில் எந்த தடுப்பூசி போடவேண்டும் தெரியுமா.?

10 Sentences About Dog in Tamil:

நாய் பற்றிய 10 வரிகள்

  1. நாய் அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். நாய் மனிதனை விட நான்கு மடங்கு தூரத்தில் உள்ள ஒலிகளை கேட்கும் திறன் கொண்டது.
  2. மனிதர்களிடம் இருக்கும் மோப்பசக்தியை விட நாயின் மோப்பசக்தி 10000 முதல் 100000 மடங்கு அதிகம் ஆகும். மனிதர்களின் உணர்வுகளை கூட நாய்கள் அவைகளின் மோப்பசக்தி மூலம் அறிந்து விடும். எடுத்துக்காட்டாக மனிதன், அச்ச உணர்வில் இருந்தால் கூட நாய்கள் அதன் மோப்பசக்தி மூலம் உணர்ந்து விடும்.
  3. நாய்கள் 7 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை வாழக்கூடியது ஆகும். நாய் குட்டிகளுக்கு 28 பற்களும், நன்கு வளர்ந்த நாய்களுக்கு 42 பற்களும் இருக்கும்.
  4. நாய், ஒரு மணி நேரத்தில் 19 மைல் தூரம் வரை ஓடும் திறன் கொண்டது ஆகும். இரவு நேரங்களில், மனிதனின் பார்வை திறனை விட  நாய்களுக்கு பார்வை திறன் அதிகமாக இருக்கும்.
  5. ஒரு பெண் நாய் ஆனது, அதன் துணை நாய் மற்றும் அவற்றின் குட்டிகளும் சேர்ந்து 6 ஆண்டுகளில் 67,000 நாய் குட்டிகளை பெற்றெடுக்க முடியுமாம்.
  6. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி உலக நாய்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாய்களுக்கு தமிழில் பல பெயர்கள் உள்ளது. நாக்கை தொட்டுக்கொண்டே திரிவதால் நாய் என்று அழைக்கப்படுகிறது. நாய் என்பதை சங்க காலத்தில் ஞாளி, ஞமலி என்று கூறுவார்கள்.
  7. மேலும், நாய்களுக்கு ஞாளி, எகினம், கடிநாய், அக்கன், அசுழம், குக்கர், கூரன், கொக்கு, செந்நாய், ஞமலி, ஞெள்ளை, முலவை, முவ்வை, மடிநாய், குடத்தி நாய், குக்குரன், கடுவாய், வடி, வங்கு, தோல்நாய், நயக்கன், தோனாய் (தோல்நாய்), பாகி, பாசி, முடுவல் போன்ற பெயர்களும் உள்ளது. நாய்களின் தோற்றத்திற்கு ஏற்ப ஒவ்வொரு பெயரில் அழைக்கப்படுகிறது.
  8. நாலடியாரில், நாய்கள் நன்றியுள்ள மிருகமாகவும், நல்லவர்களின் நட்பிற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. இந்து தெய்வமான பைரவர் என்ற தெய்வத்தின் வாகனமாக நாய் உள்ளது. இதனால், நாயை பைரவர் என்று அழைப்பார்கள்.
  9. நாய்கள் மனிதர்களுக்குக் காவல் நாய்களாகவும், ஆடுமாடுகளை மேய்க்கப் பயன்படும் மேய்ப்பு நாய்களாகவும், வேட்டையாட உதவும் வேட்டை நாய்கள் என பல்வேறு வகைகளில் பயன்படுகிறது.
  10. நாய்களுக்கு பார்வை கருப்பு வெள்ளை என இரண்டு நிறத்தில் மட்டுமே தெரியுமாம் .

நாய் கடித்தால் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா?

இதுபோன்று விலங்குகள் பற்றிய  தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Animals in Tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now