மயில் பற்றிய 10 வரிகள்.! | Interesting Facts About Peacock in Tamil

Advertisement

மயில் பற்றிய 10 வரிகள் தமிழ் | 10 Lines About Peacock in Tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மயில் பற்றிய சில தகவல்களை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். மயில் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மயிலை வியப்பாக பார்ப்பார்கள். அதன் அழகு நம் கண்களை கவரும். அதிலும், ஆண் மயில் தோகை விரித்து ஆடுவதை பார்த்து மயங்காதவார்கள் என்று யாருமே இருக்க முடியாது. சற்று நேரம் கண் இசைக்காமல் மெய்மறந்து மயில் ஆடுவதை பாப்போம். இத்தகையை சிறப்பம்சம் பெற்ற மயிலை பற்றி நம்மில் பலருக்கும் தெரியாத பல விஷயங்களை பற்றி இப்பதிவின் வாயிலாக படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.

ஆங்கிலத்தில் மயிலின் பொதுப் பெயர் Peafowl என்பதாகும். ஆண் மயிலின் பெயர் Peacock ஆகும். பெண் மயிலின் பெயர் Peahen ஆகும். இதுவே நம்மில் பலருக்கும் தெரியாது. மயிலுக்கு அழகு தருவது அதன் தோகை தான். ஆனால், ஒவ்வொரு மயிலும் 100 இறகுகளுக்கு மேல் உதிர்க்கிறது. உதிர்ந்த இறகுகள் விரைவில் வளர தொடங்கவும் செய்கிறது. இதுபோன்று நமக்கு மயில்கள் பற்றி தெரியாத பல விஷயங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

10 Lines About Peacock in Tamil:

மயில் பற்றிய 10 வரிகள்

  1. மயில் என்பது ஒரு பறவை இனமாகும். மயில்கள் இந்தியாவின் தேசிய பறவை.
  2. மழைக்காலத்தில் மயில் இறக்கைகளைத் திறந்து நடனமாடும்.
  3. மயில்கள் இந்தியா முழுவதும் காணப்படுகின்றன.
  4. மயில் தானியங்கள், பழங்கள் மற்றும் பூச்சிகள் போன்றவற்றை உணவாக உண்டு வாழ்கின்றன.
  5. மயிலின் தலையில் கல்கி உள்ளது.
  6. 1963 ஆம் ஆண்டு, ஜனவரி26 தேதி அன்று, மயிலுக்கு தேசிய பறவை என்ற அந்தஸ்து கிடைத்தது.
  7. மயில்களில் பலவகை உளள்து.  இந்திய மயில், பச்சை மயில்  காங்கோ மயில் போன்ற வகைகள் உள்ளது. இந்திய மயிலை நீல மயில் என்பார்கள்.
  8. இந்திய மயில் சுமார் 1 முதல் 1.5 மீட்டர் நீளம் கொண்டது.
  9. இந்திய மயிலின் எடை தோராயமாக 4 முதல் 6 கிலோ வரை இருக்கும்.
  10. மயில்களின் ஆயுட்காலம் சுமார் 10 முதல் 25 ஆண்டுகள் ஆகும்.

மயில் கவிதை

10 Sentences About Peacock in Tamil:

  1. மயில்கள் 20 ஆண்டுகள் வரை உயிர்வாழும் தன்மை கொண்டது. பூங்காங்கள், மனிதர்கள் இல்லாத இடங்களில் அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரையும் உயிர் வாழும்.
  2. பெண் மயில்களை விட ஆண் மயில்கள் மிகவும் அழகானவை.
  3. மயில்களுக்கு புராணங்களிலும், கலாச்சாரத்திலும் குறிப்பிடத்தக்க இடம் உண்டு.
  4. மயில்கள் மத வழிபாடுகளில் முக்கிய பங்கு முருக பெருமானின் வாகனமாகவும், சரஸ்வதிக்கு அடையாளமாகவும் திகழ்கிறது.
  5. பிறந்து ஒரு நாளே ஆன மயில் குஞ்சுகள், தாயின் உதவியின்றித் தானாகவே நடக்க ஆரம்பிக்கும். மேலும், உணவு உண்ணவும், நீர் அருந்தவும் செய்யும்.
  6. பெண் மயில்களை கவர ஆண் மயில் தன் தோகைகளை விரித்து ஆடும். பெண் மயிலுடன் இனச்சேர்க்கை செய்யும். அதன் பிறகு பெண் மயில்கள் 3 முதல் 4 முட்டைகளை இடும்.
  7. கோழிகளை போன்று அடைகாத்து குஞ்சு பொரிக்கும். குஞ்சுகள் வளரும் வரை அதனை கோழிகளை போன்று தாய் மயில் பாதுகாக்கும்.
  8. மயில்களால் 11 விதமான வித்தியாசமான ஒலிகளை எழுப்ப முடியும். பொதுவாக மயில்கள் மழை வருவதை எச்சரித்து ஒலி எழுப்புகிறது.
  9. மயில்கள் ஒலி எழுப்புவதை, “மயில் அகவுகிறது”என்று கூறுவார்கள். சாதாரண நாட்களை விட மழைக்காலத்தில் அதிகமாக ஒலியை எழுப்பும்.
  10. மயில்களுக்கு அழகான நீளமான தொகை இருந்தாலும், அவற்றால் நீண்ட தூரம் வரை பறக்க இயலாது. ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே பறக்கும்.

நாய் பற்றிய 10 வரிகள் தமிழ்

இதுபோன்று விலங்குகள் பற்றிய  தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Animals in Tamil
Advertisement