ஒட்டகம் பற்றிய தகவல்கள்
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் ஒரு விலங்கினத்தை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாக நாம் இருக்கும் சூழலில் அதிகமான விலங்குகள் இருந்து வந்தாலும், நாம் அறியாத விலங்குகள் பல இருக்கின்றன. அந்த வகையில் இந்த ஒட்டகம் விலங்கானது எதற்கெல்லாம் உதவியாக இருக்கிறது என்றும் இவை எங்கு அதிகமாக காணப்படுகிறது என்றும் இதனுடைய உடல் அமைப்புகள் பற்றியும் நம் பதிவின் மூலம் விவரமாக தெரிந்துகொள்ளலாம் வாங்க.
வெள்ளை முகம் கொண்ட கபுச்சின் குரங்கு பற்றிய தகவல் |
ஒட்டகத்தின் அதிசயங்கள்:
ஒட்டகம் பொதுவாக அதிகமாக காணப்படும் இடம் பாலைவனம் தான். இவை பாலைவனங்களில் வாழும் ஒரு வகையான தாவர உண்ணி வகையை சேர்ந்த விலங்கு ஆகும். இந்த ஒட்டகம் இனங்களில் மொத்தம் ஆறுவகையான பேரினங்கள் உள்ளன.
ஒட்டகத்தில் மிகப்பெரிய சிறப்பு என்று சொன்னால், அவை நீண்ட நாட்கள் நீரில்லாமல் வாழக்கூடிய உயிரினமாகும். அதாவது ஐந்து நாட்கள் கூட நீரில்லாமல் பாலைவனத்தில் வாழக்கூடிய தன்மைகளை கொண்டுள்ளது.
இந்த ஒட்டகத்திற்கு புல் போன்ற உணவுகள் இருந்தால் பத்து நாட்களுக்கும் மேல் கூட இவை உயிர் வாழும். இவை நீர் அருந்தும் பொழுது 100 லிட்டருக்கு மேல் அதிகமாக நீர் அருந்துவதால் இதற்கு நீர் பதம் அதிகமாகிறது.
ஒட்டகத்தின் சிறப்பு:
ஒரு முழுமையாக வளர்ந்த ஒட்டகத்தின் உயரமானது 3 மீட்டர் நீளமும் 2 மீட்டர் உயரமும் கொண்டவையாக இருக்கும். இதனுடைய மொத்த உடல் எடை 300 முதல் 1000 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும்.
ஒட்டகங்கள் பொதுவாக 65 கிலோ மீட்டர் வரையும் ஓடக்கூடியவையாகும். இவை 200 கிலோ வரையும் எடையை கொண்டு பயணிக்க கூடிய உயிரினமாகும். இவை பொதுவாக எடைகளை சுமக்கும் பொழுது 50 மீட்டர் வரையும் நடக்கும்.
ஒட்டகங்கள் கொதிக்கும் பாலைவன மணல்களில் நீரின்றியும் உணவுகள் இன்றியும் எட்டு அல்லது பத்து நாட்கள் வரையும் வாழக்கூடியவையாகும். அதோடுமட்டுமின்றி அதனுடைய எடையில் 22 சதவிகிதம் இழந்த பிறகும் உயிர்வாழும்.
ஒட்டகத்தின் உதடு பகுதிகள் ரப்பர் போன்ற தன்மையை கொண்டவையாக இருக்கும். இதன் காரணமாக அதனால் முட்கள் கொண்ட எந்தவிதான உணவு பொருட்களையும் சாப்பிடமுடியாது. அதோடு பல மைல்கள் தூரங்களில் இருக்கும் நீரை இது மோப்ப சக்தியால் அறிந்துவிடும்.
ஒட்டகத்திற்கு இருக்கும் சிறுநீரை போல எந்தவிதமான விலங்குகளுக்கும் இருக்காது. இதனுடைய சிறுநீரகம் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். ஒட்டகத்தின் சிறுநீரகத்தில் 40 % அதிகமான கழிவுகளும், மிக குறைந்த அளவிலான நீரும் இருக்கிறது. அதாவது குறைந்த அளவில் நீரை கொண்டு அதிகமான கழிவுகளை வெளியேற்றும் உயிரினமாகும்.
ஒட்டகத்தின் முதுகில் இருப்பது:
ஒட்டகத்தின் முதுகு பகுதியில் இருப்பதைத்தான் திமில்கள் என்று சொல்லப்படுகிறது. ஒட்டகமானது அதற்கு தேவைப்படும் தண்ணீரையும், உணவுகளையும் அதன் தசை முதுகு பகுதியில் சேமித்து வைத்துகொள்ளும். ஒட்டகத்தின் திமில்கள் உணவுகளை சேமிக்கும் பொழுது 45 கிலோ எடை வரையும் தண்ணீரையும், உணவுகளையும் சேமித்து வைத்துக்கொள்ளும். பொதுவாக சில ஒட்டகங்கள் ஒரு திமில் அல்லது இரண்டு திமில்களை கொண்டவையாக இருக்கும். மேலும் அதில் ஒரு திமிலை மட்டும் கொண்ட ஒட்டகம் அதிக சக்தியை கொண்டவையாக இருக்கும்.
மேலும் விலங்குகள் பற்றிய சுவாரசியமான விஷயங்களை தெரிந்துகொள்ள வந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | விலங்குகள் பற்றிய தகவல்கள் |