தவளை பற்றிய தகவல்கள்..!

Information About Frog in Tamil 

Information About Frog in Tamil  | தவளை பற்றிய செய்திகள்

நிறைய விதமான உயிரினங்களை பார்த்தாலும் ஒரு சில உயிரினங்களை பார்த்தால் மட்டும் பெண்கள் முதல் ஆண்கள் வரை பயன் கொள்வார்கள். இன்றைய பதிவில் பார்க்கப் போகின்ற உயிரினத்தை பார்த்தாலே பயம் கொள்வது ஆண்களை விட பெண்கள் தான். இது பெரும்பாலும் மழைக்காலங்களில் தான் அதிகம் காணப்படுகிறது.

மேலும் அதனை பார்க்கவே பயங்கரமாக இருக்கும். அதை விட முக்கியாக சொல்ல வேண்டுமென்றால் அது கொடுக்கும் சத்தம் தான். அந்த சத்தத்தை பார்த்து இரவு நேரங்களில் வெளியில் செல்லவே பயம் கொள்வார்கள். சரி வாங்க இது பற்றிய நிறைய விஷயத்தை தெரிந்து கொள்வோம்..!

தவளை பற்றிய தகவல்கள்:

தவளை அதனுடைய உடலின் அளவை விட 20 மடங்கு நீளமாக தாவக் கூடியது. சிவப்பு நிற கண்கள் கொண்ட தவளைகளுக்கு 3 இமைகள் உள்ளது.

தவளை பற்றிய தகவல்கள்

கண்ணாடி தவளையின் தோல் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது. இதனுடைய உள்ளுறுப்புகள், தசைகளை நம்மால் பார்க்க முடியாது.

மரத்தில் வாழும் தவளைகளுக்கு கால்களில் பசை போல் ஓட்டும் தன்மை இருக்கிறது. இதனால் மரத்திலிருந்து விரைவாக இறங்கவும் ஏறவும் உதவி செய்கிறது.

தவளை பற்றிய தகவல்கள்

ஆப்பிரிக்காவில் உள்ள Goliath Frog என்னும் தவளை தான் உலகில் மிக பெரியது. அதனுடைய எடை 6 கிலோ எடை உள்ளது. இது எலிகள் மற்றும் வாத்துகளை கூட உணவாக சாப்பிடும்.

 information about frog in tamil

சிறிய Golden Frog தான் 10 மனிதர்களை கொள்ளும் அளவிற்கு விஷ தன்மை கொண்டது. இது 2 இஞ் நீளம் இருக்கும். இது தான் மிகவும் சிறிய தவளையாகும்.

 information about frog in tamil

வட அமெரிக்காவில் மரத்தில் வாழும் Rana Sylvatica என்னும் தவளை குளிர் காலத்தில் அதனுடைய சுவாசம், இதய துடிப்பு, தசை அசைவுகளை நிறுத்தி கொள்ளும். இவற்றின் உடலில் ஒரு வகையான Antifreeze பொருளை உருவாக்குகிறது. இது உயிரணுக்கள் பனியில் உறைவதை தடுக்கிறது. குளிர்காலம் முடிந்த உடன் அது மீண்டும் பழைய நிலையை அடைகிறது.

தென் அமெரிக்காவில் உள்ள ஆண் தவளையானது அதனுடைய தலைப்பிரட்டைகளை முழுங்கிடும். சில நாட்களுக்கு பின் அது வளர்ந்த பிறகு வாயை விட்டு வெளியில் தள்ளும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉 முயல் பற்றிய நமக்கு தெரியாத சில தகவல்கள்..!

ஓட்டகம் பற்றிய சில அற்புதமான தகவல்கள்

மேலும் விலங்குகள் பற்றிய சுவாரசியமான விஷயங்களை தெரிந்துகொள்ள வந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 விலங்குகள் பற்றிய தகவல்கள்