ஜெர்மானிய மேய்ப்பன் நாய் | German Shepherd in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் தெரிந்துகொள்ளப்போவது என்னவென்றால், ஜெர்மானிய மேய்ப்பன் நாய்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். நாய் வளர்க்க வேண்டும் என்று நினைத்தால் ஜெர்மானிய மேய்ப்பன் நாய்களை வளர்ப்பது மிகவும் நல்லது. இந்த நாய்கள் பார்ப்பதற்கு கொஞ்சம் பயங்கரமாக இருந்தாலும், ஆனால் இந்த நாயின் வளர்க்கும் சொந்தக்காரர் மீது மிகவும் பாசமாக நடந்து கொள்ளும். மேலும் ஜெர்மானிய மேய்ப்பன் நாய் பற்றிய சுவாரசியமான தகவல்களை நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாங்க.
உலகின் மிக ஆபத்தான நாய்கள் |
ஜெர்மானிய மேய்ப்பன் நாய் வேறு பெயர்கள்:
ஜெர்மானிய மேய்ப்பன் நாய்கள் பல பெயர்களை கொண்டுள்ளது. ஜெர்மன் ஷெப்பர்ட் நாய், அல்சேஷன், போன்ற பெயர்களை கொண்டுள்ளது.
ஜெர்மானிய மேய்ப்பன் நாய் பற்றிய தகவல்:
ஜெர்மானிய மேய்ப்பன் நாய்களின் பிறப்பிடம் ஜெர்மனி ஆகும். இதனால் தான் இதனை ஜெர்மானிய மேய்ப்பன் நாய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வகை நாய்களின் உருவம் மிகவும் பெரிதான அமைப்புகளை கொண்டிருக்கும், எனவே இதை பார்க்கும் பொழுது தோற்றத்தில் பயங்கரமாக இருக்கும்.
இந்த நாய்கள் பொதுவாக 7 முதல் 12 ஆண்டு காலம் மட்டுமே இதற்கு ஆயுட்காலம். இந்த ஜெர்மானிய மேய்ப்பன் ஆண் நாய் 60-65 செ.மீ உயரமும், 30-40 கிலோ எடையும் கொண்டுள்ளது.
ஜெர்மானிய மேய்ப்பன் பெண் நாய்கள் 55-60 செ.மீ உயரமும், 22-32 கிலோ எடையும் கொண்டிருக்கும். பொதுவாக இந்த நாய்கள் கனிவாகவும், அறிவாகவும், நல்ல குணங்களை கொண்டதாகவும், புத்திசாலியாகவும்ம இருக்கும். இந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களின் நிறங்கள் கருப்பு, சாம்பல் நிறம், வெள்ளை, காவி நிறம் போன்ற நிறங்களில் உள்ளது.
ஜெர்மானிய மேய்ப்பன் நாய்களுக்கு மோப்ப சக்தி திறன் அதிகமாக இருப்பதினால் இவை போலீஸ், மிலிட்டரி போன்ற பணிகளில் உள்ளவர்கள் அதிகமாகவே வளர்த்து வருவார்கள்.
இவை நாம் எந்த ஒரு செய்தியை சொன்னாலும், சொன்ன உடனே புரிந்துகொள்ளும் தன்மைகளை கொண்டவையாகும். பொதுவாக ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் கோழி, வாத்து போன்ற இனங்களை துரத்தி சாப்பிட வேண்டும் என்று நினைக்காது. ஆனால் இப்பொழுது வளர்க்கப்பட்டு வரும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் வேட்டை ஆடி சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளது.
இந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களானது மிகவும் பிரபலமான ஒரு நாய் என்றும் சொல்லலாம். இவை சொல்வதை கேட்கும் நாய்கள் என்பதால் பல திரைப்படங்களிலும் நடிக்கப்பட்டு வருகிறது. ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களை கண்ணு தெரியாதவர்களுக்கு ஓரு சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கிறது. உங்கள் வீட்டில் நாய் வளர்க்க வேண்டும் என்று நினைத்தால் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் உங்களுக்கு மிகவும் ஒரு சிறந்த நாயாக இருக்கும்.
கன்னி நாய் விலை |
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |