நீர்யானை பற்றிய 10 சுவாரசியமான தகவல்கள்..!| 10 interesting facts about hippopotamus in tamil

நீர்யானை பற்றிய தகவல்கள்..!

வணக்கம் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்றைய பதிவில் பார்க்க இருப்பது மிகவும் சுவாரசியமான தகவல். அது என்னவென்றால் நீர்யானை பற்றிய 10 சுவாரசியமான தகவல்கள்..! பற்றித்தான் பார்க்க போகின்றோம். காட்டில் பல விலங்குகள் உள்ளன அப்படி என்ன தனித்துவம் கொண்டது இந்த நீர்யானை என்றுதானே யோசிக்கிறீர்கள்..!. இந்த பதிவை முழுதாக படியுங்கள் உங்களுக்கே புரியும். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.

நீர்யானை பற்றிய 10 சுவாரசியமான தகவல்கள்:

hippopotamus images

உலகத்தில் வாழக்கூடிய விலங்குகளில் இரண்டாவது பெரிய தரைவாழ் விலங்கு என்ற பெருமைக்குரியது இந்த நீர்யானை. ஆப்பிரிக்காவில் வாழும் மிகவும் பலம் பொருந்திய விலங்குகளில் இதுவும் ஒன்று ஆகும்.

இது ஒரு தாவர உண்ணி. இது பார்க்க அமைதியாக இருக்கும், மேலும் இந்த நீர் யானை தானாக சென்று யாரையும் தாக்காது அது வாழக்கூடிய இடத்தினுள் நீங்கள் அத்துமீறி நுழைந்தால் அப்பொழுது உங்களை மிகவும் மூர்க்கத்தனமாக தாக்கும்.

ஆப்பிரிக்காவில் வாழும் மிகவும் வலிமையான மற்றும் ஆபத்தான விலங்குகளில் இதுவும் ஒன்று ஆகும்.

இந்த நீர்யானைகள் தங்களுடைய பெரும்பான்மையான நேரத்தை தண்ணீரில் செலவிடக்கூடியது. தண்ணீர் பகுதியிலும் சரி நிலப்பகுதியிலும் சரி தனக்கென்று ஒரு எல்லையை வகுத்து வாழக்கூடியது இந்த நீர்யானை. அவை வாழக்கூடிய இடத்தின் எல்லைப்பகுதியை எல்லாம் பாதுகாக்க கூடிய வேலையை ஆண் நீர்யானை பார்த்துக்கொள்ளும்.

இவை கூட்டம் கூட்டமாக வாழக்கூடியது ஒரு கூட்டத்தில் 40 நீர்யானை வரை இருக்கும். இவை நீரில் உள்ள போதே குட்டிகளை பெற்றுக்கொள்ளும். இந்த குட்டிகள் பிறக்கும்போதே 45 கிலோகிராம் அளவிற்கு உடல் எடையை கொண்டுள்ளன. இந்த குட்டிகள் நடப்பதற்கு கற்றுகொள்ளுவதற்கு முன்னரே நீச்சலைக் கற்றுக்கொள்ளுகின்றன.

இவை பார்ப்பதற்கு எல்லா வேலைகளையும் மெதுவாக செய்வது போல தோன்றும். ஆனால் இதற்கு செய்வதற்கு என்று பெரியவேலைகள் இல்லை என்பதால் ஒருநாளில் 16 – 20 நேரம் வரை ஓய்வு எடுப்பதற்கே பயன்படுத்துகின்றன. ஆனாலும் 1 மணிநேரத்திற்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் இவைகளால் நடக்க முடியும்.

இவை பகல் முழுவதும் நீரில் செலவழிக்கும் ஆனால் இரவில் இவை கூட்டமாக சென்று தனக்கு மிகவும் பிடித்த புல்பகுதியை தேடி சென்றுவிடும். அப்படி அவை இரவில் இருக்கக்கூடிய அந்த புல்பகுதியில் இருந்து ஒரு நீர்யானை 45 கிலோகிராம் அளவிற்கு புல்களை உண்ணுமாம்.

இந்த நீர்யானையை நீர் குதிரை என்றும் அழைப்பார்கள். இவற்றின் வாழ்நாள் 40 ஆண்டுகள் – 50 ஆண்டுகள் வரை ஆகும். இவைகளின் உடல் நீளம் 3.5 மீ வரை உள்ளது. மேலும் இவற்றின் உடல் எடை 1500 கிலோகிராம் – 3200 கிலோகிராம் கொண்டவையாகும்.

ஆண் நீர்யானையைவிட பெண் நீர்யானை உடல் எடை குறைந்து காணப்படும்.  இவற்றின் கூர்மையான பற்களால் சாதாரணமான ஒரு படகை உடைத்து நொறுக்க கூடிய அளவிற்கு வலிமையாக இருக்கும்.

நீர்யானை என்னதான் தரைவாழ் உயிரினமாக இருந்தாலும் இவைகள் இனப்பெருக்கம் செய்வது குட்டிகளை ஈன்றுவது  போன்ற அனைத்தையும் தண்ணீரிலேயே செய்ய முடியும். இவைகளால் 5 நிமிடத்திற்கு தண்ணீரில் மூச்சை அடைத்து கொள்ள முடியும்.

இதையும் பாருங்கள் => வெள்ளை முகம் கொண்ட கபுச்சின் குரங்கு பற்றிய தகவல் 

இதுபோன்று விலங்குகள் பற்றிய  தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉Animals in Tamil