பாண்டா கரடி
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் பாண்டா கரடியை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை தெரிந்துகொள்ளப்போகிறோம். விலங்குகளில் அழகான ஒரு விலங்கு என்றும் சொல்லலாம். கரடி வகை விலங்குகளில் அதிகமான விலங்குகள் இருக்கின்றது. அதில் நாம் தெரிந்துகொள்ளப்போவது பாண்டா கரடி பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இவை சீனாவில் மட்டும் காணப்படும் ஒருவகை பாலூட்டி விலங்குகள் ஆகும். இவை கரடியை போல தோற்றம் கொண்ட ஒரு சிறிய விலங்கு ஆகும். மேலும் இதை பற்றிய சுவாரசியங்களை நம் பதிவில் தொடர்ந்து பார்க்கலாம் வாங்க.
கங்காரு பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்.! |
பாண்டா கரடி பற்றிய தகவல்கள்:
பாண்டா கரடிகள் சீனா பகுதில் சிச்சுவான் என்ற பகுதிகளிலும், அதனை சுற்றி உள்ள மலை பகுதிகளிலும் அதிகமாக வாழ்ந்து வருகின்றன. காடுகளின் அழிவின் காரணமாக அவை தாழ்வான பகுதிகளிலும், உயரமான பகுதிகளிலும் அதிகமாக வசித்து வருகிறது.
இவை சீனாவின் தேசிய சின்னமான டிராகன் இருப்பது போல பாண்டாவின் உருவமும் சீனாவில் சர்வதே விலங்காகவும் திகழ்கிறது.
பாண்டாக்கள் அதனுடைய பண்புகளில் கரடியை போலவும் ரக்கூன்களை போலவும் இருப்பதால் பல காலமாக விவகாரத்தில் இருந்து அதன் பிறகு இதற்கு பாண்டா கரடி என்று பெயர் வைக்கப்பட்டது.
பாண்டாக்கள் தொடர்பு கொள்ளும்பொழுது குரல் ஒலி, மரத்தை கிறுவது மற்றும் சிறுநீரை தெளிப்பது என இவற்றின் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த பாண்டா கரடியின் ரோமங்கள் பல பொருட்கள் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பாண்டாகள் அதிகமாக ஒரே இடத்தில் இருக்காது மரங்களுக்கு அடியிலும் , மரங்களின் கிளைகளிலும் அல்லது பாறைக்கு அடியிலும் தான் இருக்கும். அதுமட்டுமின்றி குரங்குகள் போலவே பாண்டாக்கள் அதிகமாக சேட்டைகளும் செய்யும்.
பாண்டா கரடி உடல் அமைப்பு:
பிறந்த பாண்டா குட்டிகள் இளம்சிவப்பு நிறத்தில் இருக்கும். அதோடு பிறக்கும் போது 800 கிராம் எடையை கொண்டிருக்கும். பத்து நாட்களுக்கு பிறகு அதனுடைய தாய் நிறம் போல மாறிவிடும். 40 நாட்கள் கழித்ததும் கண் தெரிந்துவிடும். அதன் பிறகு இந்த குட்டிகள் மரம் ஏறுவதற்கு தொடங்கிவிடும்.
இவை கரடியை போல் தோற்றத்தை கொண்டவை. இவை வளர்ந்த பிறகு 1.5 சுற்றளவையும், 75 செ.மீ உயரத்தையும் கொண்டவையாக இருக்கும். அதிலும் ஆண் பாண்டா கரடிகள் 115 கிலோ கிராம் எடையை கொண்டிருக்கும். பெண் பாண்டகள் 10 முதல் 20 வரை எடையை கொண்டிருக்கும்.
இவை அதிகமான ரோமங்களை கொண்டிருக்கும், அதிலும் கருப்பு, வெள்ளை நிறத்தை மட்டும் கொண்டிருக்கும். இவற்றின் கண், காது, மூக்கு, கால், கைகள் மற்றும் கருப்பாகவும், மற்ற பகுதிகள் முழுவதும் வெள்ளை நிறத்தில் அமைந்திருக்கும்.
பாண்டாகளின் உணவுகள்:
பாண்டா கரடிகள் பொதுவாக மரத்தில் சீனாவில் அதிகமாக காணப்படும் மூங்கில் மரங்களை தான் அதிகமாக சாப்பிட்டு வரும். அதிலும் அருங்காட்சிகளில் இருக்கும் பாண்டங்கள் இனிப்பு உருளைக்கிழங்கு பூக்கள், கரும்பு, கேரட், பிஸ்கட், குருணை, அரிசி, இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் ஆப்பிள் பழங்கள் போன்றவற்றை உணவாக சாப்பிட்டு வருகிறது.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |