Information About Turtle in Tamil
இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது ஆமை பற்றிய சில தகவல் தான். பொதுவாக நாம் அனைவருமே ஆமைகளை பார்த்திருப்போம். ஆனால் அதனை பற்றிய தகவல்கள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. சாதாரண ஆமைதான அதனை பற்றி என்ன தகவல் இருக்க போகிறது நீங்கள் சிந்திப்பது புரிகிறது. சாதாரண ஆமைதான் ஆனால் அதனிடம் மனிதர்கள் கண்டு வியக்ககூடிய பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் இருந்து சிலவற்றை இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> அணில் பற்றிய சுவாரசியமான 10 உண்மைகள்
ஆமை பற்றிய தகவல்கள்:
- ஆமை அல்லது யாமை என்பது ஒரு ஊர்வன வகுப்பைச் சேர்ந்த விலங்கு ஆகும்.
- இவற்றின் உடலில் முதுகுப்புறம் உள்ள தனித்துவமான குருத்தெலும்பு ஓடுகள் இவறிற்கு ஒரு கவசம் போல் செயல்படுகிறது.
- ஆமைகளில் இதுவரை 356 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- ஆமைகள் ஒரு குளிர் இரத்த விலங்கு ஆகும். அதாவது இதனுடைய உடலை வெப்பநிலை சூழலுக்குஏற்றவாறு இவற்றால் மாற்றிக்கொள்ள முடியும்.
- ஆமைகள் பொதுவாக நீரினுள் வாழ்ந்தாலும் அது நீரினுள் முட்டை இடாமல் தரையினில் கூடுகட்டி தான் முட்டை இடுகின்றன.
- ஆமைகள் ஒரு கூட்டினுள் 100-125 முட்டைகளை இடுகின்றன.
- உலகின் பெரிய ஆமையினமான பேராமை 200 செ.மீ (6.6 அடி) நீளமும் 900 கிலோ கிராம் எடையையும் கொண்டிருக்கும்.
- சீசெல்சு தீவிலும் கலாபகசுத் தீவுகளிலும் வாழும் நில ஆமைகள் 130 செ.மீ (51 அங்குலம்) நீளமும் 300 கிலோ எடையையும் கொண்டிருக்கும்.
- உலகின் சிறிய ஆமையான செர்சோபியசு சிக்னேட்டசு என்னும் ஆமைகள் தோராயமாக 8 செ.மீ (3.1 அங்) நீளமும் 140 கிராம் எடையும் கொண்டிருக்கும்.
- பொதுவாக ஆமைகள் தங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் தங்களின் தலையினை தங்களின் ஓட்டின் உட்புறமாக இழுத்து மறைத்துக்கொள்ளும். ஆனால் கடல் ஆமைகள் அவற்றின் ஓடுகளுக்குள் தங்களின் தலையை இழுத்துக்கொள்வது இல்லை.
இதையும் படியுங்கள்=> நீர்யானை பற்றிய 10 சுவாரசியமான தகவல்கள்
இதுபோன்று விலங்குகள் பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 | Animals in Tamil |