Information about Woodpecker Bird in Tamil
இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். பொதுவாக நாம் அனைவருமே தினமும் பார்த்து ரசிக்கும் பறவைகளில் ஒன்று தான் மரங்கொத்தி பறவை. அப்படி நாம் பார்த்து ரசிக்கும் மரங்கொத்தி பறவை பற்றிய முழுவிவரங்களும் உங்களுக்கு தெரியுமா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். அப்படி உங்களுக்கும் தெரியவில்லை என்றால் பரவாயில்லை இன்றைய பதிவில் மரங்கொத்தி பறவை பற்றிய மிகவும் சுவாரசியமான மற்றும் பல வியக்க வைக்கும் தகவலை தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து மரங்கொத்தி பறவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=>உலகிலேயே மிகச்சிறிய பறவை எது உங்களுக்கு தெரியுமா..?
Marangoththi Paravai Patriya Thagaval in Tamil:
பொதுவாக மரங்கொத்தி பறவை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மடகாஸ்கர் போன்ற இடங்களை தவிர உலகின் மற்ற இடங்களில் எல்லாம் பரவி உள்ளது.
இவை பொதுவாக காடுகள், பாறைப்பகுதிகளிலும் மற்றும் பாலை நிலங்களிலும் வாழ்கின்றன.
மேலும் மரங்கொத்திகளில் சுமார் 200 சிற்றினங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றில் 95 சதவீத மரங்கொத்திகள் மரத்திலேயே வாழ்கின்றன.
இவற்றுக்கு மிகவும் கூர்மையான, வலுவான அலகுகள் உள்ளது. அவற்றை பயன்படுத்தி மரங்களில் வாழும் பூச்சிகலாளை முக்கிய உணவாக இவை எடுத்து கொள்கின்றன.
இந்தப் பறவையின் நாக்கு நீளமாகவும், பசைத் தன்மை கொண்டிருப்பதாலும் தன்னால் செல்ல முடியாத மரப்பொந்துகளில், தன் நாக்கை நீட்டி, அங்குள்ள பூச்சிகளை பிடித்து உண்ணும்.
மேலும் இவை பூச்சிகள் தவிர, பழங்கள், பருப்புகள் மற்றும் பூவிலிருக்கும் தேன் ஆகியவற்றையும் விரும்பி உண்ணும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> கருப்பு நிறத்தில் முட்டையிடும் பறவை எது தெரியுமா..?
பொதுவாக மரங்கொத்திகள், மரப் பொந்துகளில் தான் முட்டையிடுகின்றன. சுமார் இரண்டு வாரங்களிலேயே குஞ்சினை பொறித்து விடுகின்றன. குஞ்சுகளை பாதுகாக்க தாய் அல்லது தந்தை பறவை மரத்திலேயே காவல் இருக்கும். ஒரு பறவை மட்டுமே இரைத் தேடிச் செல்லும்.
சுமார் 25 முதல் 30 நாட்களில் குஞ்சுகளுக்கு இறக்கை முளைத்து பறக்கும்.
மரங்கொத்தி ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை கொத்துகின்றன.
இவை மரத்தை இவை கொத்தும் போது ஏற்படும் ஒலியை தவிர, தன் இனத்தை சேர்ந்த இதர பறவைகளுடன் தொடர்பு கொள்ளவும் மரத்தைத் தன் அலகால் தட்டித் தட்டி ஒலி எழுப்புகின்றன.
அதிலும் குறிப்பாக, இனப்பெருக்கக் காலத்தில் இணையை ஈர்ப்பதற்காக இவ்வாறு அது ஒலி எழுப்பும். மேலும் இவற்றால் ஒரு நாளைக்கு 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் முறை, மரத்தை தன் அலகால் தட்டி தட்டி ஒலி எழுப்ப முடியும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> ஆக்டோபஸ் பற்றிய தகவல்கள்
இதுபோன்று விலங்குகள் பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 | Animals in Tamil |