ஆக்டோபஸ் பற்றிய தகவல்கள்..!

Advertisement

Octopus Information in Tamil

நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் உங்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் ஒரு வகை விலங்கு பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் மிகவும் புத்திசாலி கடல் வாழ் உயிரினமான ஆக்டோபஸ் பற்றிய முழு விவரங்களையும் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். ஆக்டோபஸ்களிடம் மனிதர்கள் கண்டு வியக்ககூடிய பல சுவாரசியமான தகவல்கள் உள்ளது. அவை அனைத்தையும் பற்றி இன்றைய பதிவில் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

Octopus Information in Tamil:

Octopus Information in Tamil

பொதுவாக ஆக்டோபஸ்களை தமிழில் பேய்க்கணவாய் என்று அழைப்பார்கள். ஆக்டோபஸ்கள் அனைத்து கடல்களிலும் அனைத்து விதமான இனங்களிலும் காணப்படும்.

இந்த ஆக்டோபஸ்களில் மொத்தம் 300 வகையான இனங்கள் உள்ளது.

பொதுவாக அனைத்து வகையான ஆக்டோபஸ்களும் குறுகிய கால ஆயுட்காலங்களையே கொண்டுள்ளன. நீண்ட காலம் வாழக்கூடிய ஆக்டோபஸ்களின் ஆயுட்காலம் கூட மூன்று முதல் நான்கு ஆண்டுகளாகவே உள்ளன.

இதையும் படித்துப்பாருங்கள்=> குதிரை பற்றிய சுவாரசியமான தகவல்கள்

ஆக்டோபஸிற்கு மூன்று இதயங்கள் உள்ளன. ஒரு இதயம் அவற்றின் இரத்த ஓட்ட அமைப்பு முழுவதும் கட்டுப்படுத்த உதவுகிறது. மற்ற இரண்டு இதயங்களும் அதனின் செவுள்கள் வழியாக இரத்தத்தை பாய செய்ய உதவுகிறது.

இவற்றின் உடலில் எலும்பு இல்லாததால், மிகச் சிறிய இடுக்குகளிலும் அவற்றால் நுழைந்து வெளிவர இயலும்.

இவற்றுக்கு ஒன்பது மூளைகள் உண்டு. அதில் ஒரு மைய மூளை நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்துகிறது. மற்ற எட்டு மூளைகளும் அவற்றின் எட்டு கைகளிலும் உள்ளது.

இதன் இரத்தம் நீல நிறத்தில் உள்ளது. இதற்கு காரணம் இதன் இரத்தத்தில் உள்ள ஹீமோசயனின் என்ற செப்பு நிறைந்த புரதம் தான்.

இவை மிகவும் புத்திக்கூர்மையுடைய கடல்வாழ் உயிரினமாகும். இவற்றால் மனிதர்களின் முகத்தை நன்கு நினைவில் வைத்து கொள்ள முடியுமாம்.

இவற்றால் தங்களின் நிறம் மற்றும் வடிவத்தை 30 நொடிகளில் மாற்றும் குறிப்பிடத்தக்க திறனைக் கொண்டுள்ளன.

இது ஒரு விஷத்தன்மை கொண்ட உயிரினம் ஆகும். ஆனாலும் சில வகையான ஆக்டோபஸ்கள் மட்டுமே மனிதர்களின் உயிரை எடுக்கும் அளவிற்கு விஷத்தினை கொண்டிருக்கும்.

இதையும் படித்துப்பாருங்கள்=>அணில் பற்றிய சுவாரசியமான 10 உண்மைகள்

இதுபோன்று விலங்குகள் பற்றிய  தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Animals in Tamil

 

Advertisement