அணில் பற்றிய சுவாரசியமான 10 உண்மைகள்..!

Advertisement

Squirrel Interesting Facts in Tamil 

பொதுவாக நாம் அனைவரும் தினமும் பார்க்கக்கூடிய அணில் பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம். பொதுவாக அணில் மிகவும் அழகாக மற்றும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். அப்படி நாம் தினமும் பார்க்கக்கூடிய அணில் பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..? அப்படி தெரியவில்லை என்றால் பரவாயில்லை இன்றைய பதிவில் அணில் பற்றிய பல வியக்கவைக்கும் மற்றும் மிகவும் சுவாரசியமான தகவல்களை பற்றி தான் தெரிந்துக் கொள்ளப் போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அணில் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்=> நீர்யானை பற்றிய 10 சுவாரசியமான தகவல்கள்

Anil Patriya Thagaval in Tamil:

Anil Patriya Thagaval in Tamil

  1. அணிலின் பூர்விக இடம் என்றால் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆகும்.
  2. உலகம் முழுவதும் 285 வகையான அணில்கள் உள்ளன.
  3. அணில் பொதுவாக அண்டார்டிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படாது. இன்றைய காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் மற்ற நாடுகளில் இருந்து அணிலை இறக்குமதி செய்து வளர்க்கிறார்கள்.
  4. பொதுவாக அணில் மரம் ஏறும் போது 180° வரை தனது உடலை வளைத்து தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று பார்க்க திறம் கொண்டது.
  5. அதேபோல் அணிலின் கண்களினால் தனக்கு பின்னால் என்ன நடக்கிறது என்றும் பார்க்க முடியும்.  
  6. அணில் எப்பொழுதும் கொறித்து கொறித்தே சாப்பிடும் இதற்கு காரணம் இதன் பற்கள்தான். அணில் மட்டும் கொறித்து சாப்பிடவில்லை என்றால் அதனின் பற்கள் நன்கு வளர்ச்சி அடைந்து அதன் வாய் முழுவதையும் மூடிவிடுமாம். 
  7. அணிலினால் 30 மீட்டர் உயரத்தில் இருந்தும் கீழே குதித்து உயிர்பிழைக்க முடியும்.
  8. அணில் மிகவும் அறிவுக்கூர்மை உடைய விலங்கு ஆகும்.
  9. அணில்கள் தனது உடல் எடைக்கு நிகராக உணவுகளை சாப்பிடும்.
  10. பொதுவாக அணில் கூட்டத்தில் ஒரு தாய் அணில் இறந்துவிட்டால் அந்த கூட்டத்தில் உள்ள மற்றொரு தாய் அணில் அந்த இறந்த தாய் அணிலின் குட்டிகளை மனிதர்கள் குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பது போல் அதுவும் வளர்க்கும். 
இதுபோன்று விலங்குகள் பற்றிய  தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Animals in Tamil
Advertisement