வரிக்குதிரை பற்றி அறிந்து கொள்ள இவ்வளவு விஷயம் உள்ளதா..?

Zebra Information in Tamil

Zebra Information in Tamil

இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி உங்களுக்கு கிடைக்கும். அப்படி என்ன தகவல் என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. நாம் அனைவருமே வரிக்குதிரைகளை தொலைக்காட்சிகளில் அல்லது மிருகக்காட்சி சாலைகளிலும் பார்த்து ரசித்திருப்போம். அப்படி நாம் பார்த்து ரசிக்கும் வரிக்குதிரைகளை பற்றிய முழுவிவரங்களும் உங்களுக்கு தெரியுமா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். அப்படி உங்களுக்கும் தெரியவில்லை என்றால் பரவாயில்லை இன்றைய பதிவில் வரிக்குதிரைகளை பற்றிய மிகவும் சுவாரசியமான மற்றும் பல வியக்க வைக்கும் தகவலை தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து வரிக்குதிரைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

குதிரை பற்றிய சுவாரசியமான தகவல்கள்

வரிக்குதிரை பற்றிய தகவல்கள்:

Zebra Animal Information in Tamil

பொதுவாக வரிக்குதிரைகளும் பாலூட்டி இனத்தை சேர்ந்த ஒரு விலங்கு ஆகும்.

இது ஒரு தாவர உண்ணி ஆகும். இவை குதிரை இனத்தைச் சேர்ந்தது.

வரிக்குதிரைகளும் குதிரை மற்றும் கழுதை போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம் ஆகும்.

வரிக்குதிரைகள் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட விலங்கினம் ஆகும்.

இவை உடல் முழுவதும் கருப்பு மற்றும் வெள்ளையிலான வரிகளைக் கொண்டுள்ளன. இதனாலாயே இவை தமிழில் வரிக்குதிரைகள் என அழைக்கப்படுகின்றன.

மனிதர்களின் கைரேகைக்கு தனித்தன்மை உண்டு. ஒருவருக்கு இருப்பது போல மற்றொருவருக்கு கைரேகைகள் இருக்காது. அதே போல தான் வரிக்குதிரையின் உடலில் உள்ள வரிகளும் தனித்தன்மை கொண்டவை. ஒரு வரிக்குதிரைக்கும், மற்றொரு வரிக்குதிரைக்குமான வரிகளில் தனித்துவம் இருக்கும்.

அதாவது வரிக்குதிரையின் ஒவ்வொரு இனமும் வெவ்வேறு பொதுவான கோடுகளைக் கொண்டுள்ளது. கிரேவியின் வரிக்குதிரை மிகவும் மெல்லிய கோடுகளைக் கொண்டுள்ளது. அதேபோல் மலை வரிக்குதிரை அதன் கழுத்து மற்றும் உடற்பகுதியில் செங்குத்து கோடுகளைக் கொண்டுள்ளது.

மரங்கொத்தி பறவை பற்றி அறிந்து கொள்ள இவ்வளவு விஷயம் உள்ளதா

 இவை எப்பொழுதும் கூட்டமாகவே இருக்கும்.

மேலும் இவை எப்பொழுதும் நின்றுகொண்டே தூங்கும் பண்பு கொண்டது. அதாவது இரண்டு வரிக்குதிரைகள் ஒன்றின் மீது ஒன்று தங்களின் கழுத்துப் பகுதியை வைத்துக் கொண்டு நின்று கொண்டே ஓய்வு எடுத்துக் கொள்ளும்.

ஒவ்வொரு இன வரிக்குதிரைக்கும் அதற்கென்று தனி தனியாக சொந்த வாழ்விடம் உள்ளது. அதாவது சமவெளி வரிக்குதிரைகள் கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்காவின் மரங்களற்ற புல்வெளிகள் மற்றும் வனப்பகுதிகளில் வாழ்கின்றன.

அதே போல் கிரேவியின் வரிக்குதிரை எத்தியோப்பியா மற்றும் வடக்கு கென்யாவின் வறண்ட புல்வெளிகளில் வாழ்கிறது. மலை வரிக்குதிரை தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் அங்கோலாவில் காணப்படுகிறது.

பொதுவாக நன்கு வளர்ச்சி அடைந்த வரிக்குதிரைகள் 1 – 2 மீட்டர் உயரமும் 2 – 3 மீட்டர் நீளமும் கொண்டு இருக்கும். மேலும் அவை 250 இல் இருந்து 500 கிலோ எடை வரை இருக்கும்.

வரிக்குதிரைகளால் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட முடியும். சாதாரணமாக ஒரு நாளில் இவை 80 கிலோ மீட்டர் தொலைவு வரை நடக்க முடியும்.

காட்டில் உள்ள வரிக்குதிரைகள் 20 முதல் 30 ஆண்டுகள் வரை வாழுகின்றன. இதுவே மிருகக்காட்சி சாலையில் 40 ஆண்டுகள் வரை உயிர் வாழுகின்றன.

ஆக்டோபஸ் பற்றிய தகவல்கள்

இதுபோன்று விலங்குகள் பற்றிய  தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Animals in Tamil