CUB Bank FD Calculator
நாம் பணத்தை சேமிப்பது பற்றி நிறைய கேள்வி பட்டிருப்போம். அதேபோல் நாம் சில சேமிப்பு திட்டங்களிலும் சேமித்து வருவோம். ஆனால் சேமிப்பு போலவே மிகவும் முக்கியமான ஒன்று இருக்கிறது. அது வேறு ஒன்றும் இல்லை முதலீடு தான். முதலீடு என்பது நாம் குறிப்பிட்ட அளவினை பணத்தினை ஏதோ ஒரு பொருளாதார முயற்சியில் நீண்ட கால முதலீட்டினை பெரும் முறை ஆகும். இத்தகைய முதலீட்டு முறை என்பது நிறைய நபருக்கு புரிந்து இருந்தாலும் கூட இதில் உள்ள வட்டி விகிதம் மற்ற விவரங்கள் அனைத்தும் சரியாக தெரிவது இல்லை. அதனால் இன்று சிட்டு யூனியன் வங்கியில் உள்ள FD திட்டத்தின் கீழ் எவ்வளவு ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு ரூபாயினை திரும்பி பெறலாம் என்ற முழுத்தகவலினை தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
டெபாசிட் தொகை:
இந்த திட்டத்தில் நீங்கள் டெபாசிட் செய்வதற்கான குறைந்தபட்ச தொகை 10,000 ரூபாய் ஆகும். மேலும் அதிகப்பட்ச தொகை என்றால் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம்.
வட்டி தொகை:
பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி தொகை என்பது உங்களின் டெபாசிட் தொகை மற்றும் முதிர்வு காலத்தினை பொறுத்து அமையும்.
முதிர்வு காலம்:
சிட்டி யூனியன் வங்கியில் அறிமுகம் செய்து உள்ள இந்த திட்டத்தில் உங்களுக்கான முதிர்வு காலம் என்பது 30 நாட்கள் முதல் 5 வருடங்கள் வரை உள்ளது. இதில் உங்களுக்கான முதிர்வு காலத்தினை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
1,50,000 ரூபாய் டெபாசிட் செய்தால் கிடைக்கும் தொகை எவ்வளவு:
General Citizens:
பொதுமக்கள் இந்த திட்டத்தின் கீழ் 1,50,000 ரூபாயினை 5 வருட கால அளவில் டெபாசிட் செய்தால் உங்களுக்கான வட்டி விகிதமாக 6.25% அளிக்கப்படுகிறது.
ஆகவே 5 வருடத்திற்கான வட்டி தொகையாக 53,112 ரூபாயும் மற்றும் வட்டி மற்றும் அசல் தொகையாக 2,03,112 ரூபாயும் கிடைக்கும்.
Senoir Citizens:
அதேபோல் மூத்த குடிமக்களுக்கு இந்த திட்டத்திறக்கான வட்டி விகிதமாக 6.5% வரை அளிக்கப்படுகிறது.
அப்படி என்றால் இவர்களுக்கான மொத்த வட்டி தொகையாக 55,513 ரூபாய் கிடைக்கும். மேலும் 5 வருடத்திற்கான வட்டி மற்றும் அசல் தொகையாக 2,05,513 ரூபாயினை பெறலாம்.
குறிப்பு: இதில் உங்களின் டெபாசிட் தொகையினை பொறுத்தே வட்டி மற்றும் அசல் தொகை வேறுபடும்.
Rd திட்டத்தில் மாதந்தோறும் 1000 ரூபாய் சேமித்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்..
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |