KVB Bank Business Loan Details
இன்றைய காலத்தில் உள்ள மக்கள் யாரும் கடன் வாங்காமல் இருப்பது இல்லை. தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க பண வரவும் அதிகரித்து கொண்டு போவதால் ஒரு கட்டத்திற்கு மேல் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. அதுவே நமக்கு பெரிய அளவிலான தொகை வேண்டும் என்றாலோ அல்லது தொழில் தொடங்க குறிப்பிட்ட தொகை வேண்டும் என்றாலோ இதற்கான கடனை நாம் வங்கியிலேயே பெற்றுகொள்ளலாம். ஆனால் இந்த கடனை வாங்குவதற்கு முன்பாக அதில் உள்ள வட்டி விகிதம், தகுதி மற்றும் இதர அனைத்தினையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதனால் இன்று கரூர் வைஸ்யா பேங்க் வங்கியில் சுமார் 2 லட்சம் ரூபாயினை பிசினெஸ் லோனாக பெற்றால் எவ்வளவு வட்டி விகிதம் என்றும், EMI தொகை எவ்வளவு என்று தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
2 Lakh Business Loan EMI Calculator KVB Bank:
வயது தகுதி:
கரூர் வைஸ்யா வங்கியில் வணிக கடனை பெற விரும்பும் நபர்களுக்கு குறைந்தப்பட்ச வயது 21 முதல் அதிகப்பட்ச வயது 65-ற்குள் இருக்க வேண்டும்.
கடன் தொகை:
இந்த வங்கியில் வணிகக்கடனுக்கான அதிகப்பட்ச தொகையாக 10 கோடி வரையிலும் தோராயமாக வழங்கப்படுகிறது.
வட்டி விகிதம்:
நீங்கள் பெரும் வணிக கடனுக்கான வட்டி விகிதமாக தோராயமாக 11.85% வரை அளிக்கப்படுகிறது.
கடனுக்கான காலம்:
இத்தகைய பேங்கில் நீங்கள் பெறும் கடனை திரும்பி செலுத்துவதற்கான காலமாக 1 வருடம் முதல் 7 வருடம் வரை வழங்கப்படுகிறது. மேலும் இதில் நீங்கள் கடனை வாங்கிய முதல் 6 மாதங்களில் EMI தொகையினை செலுத்த வேண்டியது இல்லை.
தேவையான ஆவணம்:
- ஆதார் கார்டு
- பான் கார்டு
- ஓட்டுநர் உரிமம்
- வாக்காளர் அட்டை
- பாஸ்போர்ட்
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
மேலே சொல்லப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தும் உங்களுக்கான அடையாளமாகவும் நீங்கள் வசிக்கும் இடத்திற்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது.
2 லட்சம் ரூபாய்க்கு செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு:
ஒரு நபர் கரூர் வைஸ்யா வங்கியில் 2,00,000 ரூபாயினை வணிக கடனாக பெற்றால் அதற்கான வட்டி விதமாக 11.85% அளிக்கப்படுகிறது. மேலும் இந்த கடனை திரும்ப செலுத்துவதற்கான கடன் காலமாக 5 வருடம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே 2,00,000 ரூபாய்க்கான மொத்த வட்டி தொகையாக 66,021 ரூபாயும், மாதாந்திர EMI தொகையாக 4,434 ரூபாயும் செலுத்த வேண்டும். அப்படி என்றால் உங்களுடைய கடனுக்கான மொத்த தொகை தோராயமாக 2,66,040 ரூபாய் ஆகும்.
குறிப்பு: நீங்கள் பெரும் கடன் தொகையினை பொறுத்து EMI என அனைத்தும் மாறுபடும்.
2023 ஆண்டு இந்தியன் வங்கியில் தங்க நகை கடனுக்கு இவ்வளவு குறைவான வட்டியா
என்ன சொல்லுறீங்க மாதம் 2,000 ரூபாய் மட்டுமே செலுத்தி 3,24,412 ரூபாய் வரை பெறலாமா
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |