Canara Bank FD Calculator 2023
பொதுவாக சேமிப்பாக இருந்தாலும் சரி அல்லது முதலீடாக இருந்தலும் சரி அதில் வட்டி விகிதம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் இந்த வட்டி விகிதத்தை நாம் சரியாக கணக்கிட முடியுமா என்றால்..? அது கொஞ்சம் கடினம் தான் என்று கூறுவார்கள். ஆனால் வட்டி விகிதத்தை மிகவும் எளிமையான முறையில் கணக்கிடலாம். அதாவது நீங்கள் சேமிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் அதற்கான டெபாசிட் தொகை மற்றும் வட்டி விகிதம், முதிர்வு காலம் என இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து Calculator மூலம் உங்களுக்கான விவரங்களை பெறலாம். ஆனால் இதற்கான சரியான வழிமுறைகள் என்னென்ன என்பது பலருக்கு தெரியாமலே இருக்கிறது. அதனால் இன்று ஒரு உதாரணமாக கனரா பேங்க்கில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 2 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்பதை பதிவின் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
2 Lakh FD for 5 Years Canara Bank Calculator:
முதலீடு தொகை:
கனரா வங்கியில் அறிமுகம் செய்து இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்தப்பட்ச தொகை 1,000 ரூபாய் முதல் அதிகப்பட்ச தொகையாக 2 கோடி வரை உள்ளது.
வட்டி விகிதம்:
பொதுவாக FD திட்டத்திற்கான வட்டி விகிதம் என்பது பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என இரண்டு விதமாக முதிர்வு காலத்திற்கு ஏற்றவாறு வட்டி தொகை வழங்கப்படுகிறது.
முதிர்வு காலம்:
இதில் உங்களுக்கான முதிர்வு காலம் 7 நாட்கள் முதல் 10 வருடம் வரை ஆகும். ஆகவே இந்த திட்டத்தை பொறுத்தவரை டெபாசிட் தொகை முதல் முதிர்வு காலம் வரை அனைத்தையும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
2 லட்சம் டெபாசிட் செய்தால் கிடைக்கும் மொத்த தொகை எவ்வளவு:
Normal Citizen:
கனரா வங்கியில் உள்ள FD திட்டத்தில் பொதுமக்கள் ஒருவர் 5 வருட கால அளவில் 2 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் அவருக்கான வட்டி விகிதம் 6.8% வரை அளிப்படுகிறது.
ஆகவே இதனை வைத்து பார்க்கும் போது மொத்த வட்டி தொகையாக 80,188 ரூபாயும், முதிர்வு காலத்திற்கு பின்பு அசல் தொகையாக 2,80,188 ரூபாயும் கிடைக்கிறது.
Senior Citizen:
அதுவே மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 7.3% கணக்கின்படி 87,156 ரூபாய் வட்டி தொகையாக கிடைக்கிறது.
மேலும் 5 வருடம் கழித்து மொத்த அசல் தொகையாக 2,87,156 ரூபாய் கிடைக்கிறது.
குறிப்பு: இதில் உங்களின் டெபாசிட் தொகையினை பொறுத்தே வட்டி மற்றும் அசல் தொகை வேறுபடும்.
Canara வங்கியில் 1 லட்சம் செலுத்தினால் 2,04,132 ரூபாய் பெறக்கூடிய அருமையான திட்டம்
444 நாட்களிலேயே 1,10,114 ரூபாய் வரை கிடைக்கும் திட்டம்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |