5 வருடத்தில் பிக்சட் டெபாசிட் திட்டம் மூலம் 2,77,249 ரூபாய் கிடைக்கக்கூடிய திட்டம்..!

Advertisement

Indian Bank FD Calculator 2023

அனைவருடைய வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு நபர்கள் வேலைக்கு செல்கிறார்கள். அப்படி இல்லை என்றால் எதிர்கால தேவையினை நினைத்து சுயதொழில் செய்கிறார்கள். இத்தகைய இரண்டு முறைகளில் தான் பெரும்பாலான நபர்கள் பணத்தினை சம்பாதித்து வருகிறார்கள். ஆனால் எந்த முறையில் அதிக சம்பாதிக்கலாம் என்று தெரிந்த நம்மில் பலருக்கு சம்பாதிக்கும் பணத்தினை எதில் சேமிப்பது என்று சரியாக தெரிவது இல்லை. ஏனென்றால் பணத்தினை நாம் சேமிக்க வேண்டும் என்றால் எந்த திட்டத்தில் சேமிக்கிறோமோ அத்தகைய திட்டம் பற்றிய முழு தகவலும் நமக்கு தெரிந்துருப்பது அவசியம். இதுபோன்ற தகவல்கள் நிறைய நபருக்கு தெரியாமல் இருக்கும் காரணத்தினால் தான் அதிகமாக சேமிப்பு திட்டங்கள் சேர்ந்து பயன் அடைய மக்கள் யாரும் முன்வருவது இல்லை. அதனால் தான் இன்று உதாரணமாக இந்தியன் வங்கியில் உள்ள FD திட்டத்தில் எவ்வளவு ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Indian Bank FD Scheme 2 Lakh Calculator 2023:

 indian bank fd calculator 2023 in tamil

இந்தியன் வங்கியில் உள்ள இந்த Fixed deposit  திட்டத்தில் 18 வயதிற்கு மேல் உள்ள அனைத்து இந்திய குடியுரிமை பெற்றவர்களும் சேரலாம். மேலும் சீனியர் சிட்டிசன் என்றால் 80 வயது அல்லது அதற்கு மேல் வயது இருக்க வேண்டும்.

டெபாசிட் தொகை:

இந்த Fixed deposit  திட்டத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்த பட்ச தொகை 1,000 ரூபாய். அதிகபட்ச தொகை என்று எந்த விதமான வரம்பும் இல்லை. உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு டெபாசிட் செய்யலாம்.

வட்டி விகிதம்:

நீங்கள் தேர்வு செய்யும் முதிர்வு காலத்தினை பொறுத்து தான் வட்டி விகிதம் என்பது வழங்கப்படும். மேலும் பொதுமக்களை விட சீனியர் சிட்டிசனிற்கு கூடுதலாக வட்டி வழங்கப்படும்.

முதிர்வு காலம்:

இந்தியன் பேங்கில் உள்ள இந்த FD திட்டத்திற்கான முதிர்வு காலம் 7 நாட்கள் முதல் 10 வருடம் வரை ஆகும்.

2 லட்சம் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும்:

General Citizen:

இந்தியன் பேங்கில் Fixed deposit திட்டத்தின் கீழ் பொதுமக்கள் டெபாசிட் செய்தால் அவர்களுக்கு 5 வருடத்திற்கான வட்டி விகிதம் 6.25% ஆகும்.

எனவே 5 வருட கால அளவில் 2 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் வட்டி தொகையாக 70,816 ரூபாய் கிடைக்கும். 5 வருடம் கழித்து அசல் மற்றும் வட்டி தொகை சேர்த்து 2,70,816 ரூபாய் கிடைக்கும்.

Senior Citizen:

இந்த திட்டத்திலேயே சீனியர் சிட்டிசனிற்கு வட்டி தொகையாக 6.75% வரை வழங்கப்படுகிறது.

ஆகவே இந்த திட்டத்தில் 5 வருட கால அளவில் 2 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் 77,249 ரூபாய் வட்டி தொகையாக கிடைக்கும். மேலும் 5 வருடத்திற்கு பிறகு அசல் மற்றும் வட்டி தொகையாக 2,77,249 ரூபாய் கிடைக்கும்.

36,353 ரூபாய் வட்டி கிடைக்கும் அருமையான திட்டங்களை பற்றி பார்க்கலாம் வாங்க 

5 வருடத்தில் 7 லட்சம் வரை பெறும் அருமையான திட்டம் 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement