Bank ஆப் Baroda Calculator FD
பொதுவாக மக்கள் அனைவருக்கும் பணத்தினை ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் சேமிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அத்தகைய ஆர்வத்தினை செயல்முறை படுத்தும் அடுத்தக்கட்ட நோக்கமாக அதில் சேமிக்க தொடங்கலாம் என்று நினைக்கும் போது எவ்வளவு ரூபாய் சேமித்தால் எவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்ற திட்டமிடுதலை பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் அத்தகைய யோசனைக்கான சரியான பதிலை எத்தகைய முறையில் பெறுவது என்று தெரியாமல் இருப்பார்கள். அதனால் இன்றைய பதிவில் ஒரு உதாரணமாக 2 லட்சம் ரூபாய் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 1 வருட கால அளவில் முதலீடு செய்தால் கிடைக்கும் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
2 Lakh FD Interest For 1 Year in BOB Bank Calculator:
இத்தகைய திட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் BOB வங்கியில் சேர்ந்து பயன்பெறலாம்.
டெபாசிட் தொகை:
பிக்சட் டெபாசிட் திட்டத்தில் குறைந்தப்பட்ச தொகை என்பது 1,000 ரூபாய் ஆகும். அதுவே அதிகப்பட்ச தொகை என்று வரம்பு எதுவும் கிடையாது.
வட்டி விகிதம்:
இந்த திட்டத்திற்கான வட்டி விகிதமாக 3% முதல் 7.75% வரை அளிக்கப்படுகிறது. மேலும் வட்டி விகிதம் என்பது உங்களின் முதிர்வு காலத்தை பொறுத்து தான் அமையும்.
மேலும் வட்டி விகிதம் பொதுமக்கள் மற்றும் சீனியர் சிட்டிசனை பொறுத்து மாறுபடும்.
டெபாசிட் காலம்:
அதேபோல் இதற்கான டெபாசிட் காலமாக 7 நாட்கள் முதல் 10 வருடம் வரை அளிக்கப்படுகிறது. ஆகவே இதில் உங்களுக்கு எதை வேண்டுமோ அதனை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
1 வருடத்தில் 2,00,000 ரூபாய் செலுத்தினால் எவ்வளவு தொகை கிடைக்கும்:
General Citizen | Senior Citizen | ||||
டெபாசிட் தொகை | முதிர்வு காலம் | 6.75% வட்டி தொகை | அசல் தொகை | 7.25 % வட்டி தொகை | அசல் தொகை |
2,00,000 ரூபாய் | 1 வருடம் | 13,846 ரூபாய் | 2,13,846 ரூபாய் | 14,899 ரூபாய் | 2,14,899 ரூபாய் |
குறிப்பு: வட்டி மற்றும் அசல் தொகை என்பது உங்களின் வட்டி விகிதம் மற்றும் டெபாசிட் தொகை இரண்டினையும் பொறுத்து தான் அமையும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |