ICICI Bank RD Calculator 2023
பொதுவாக நாம் அனைவரும் இந்தியன் பேங்க், SBI பேங்க், கனரா பேங்க் மற்றும் ICICI பேங்க் என இதுபோன்ற வங்கிகளில் சேமிக்கு கணக்கோ அல்லது நடப்பு கணக்கோ வைத்து இருப்போம். இன்றைய காலத்தை பொறுத்தவரை வங்கியில் கணக்கு வைத்து இருப்பது என்பது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் ஒரு வங்கியில் நாம் கணக்கு வைத்து இருப்பது என்பது பெரிய விஷயமோ அல்லது செயலோ இல்லை. ஏனென்றால் வங்கியில் நமக்கு தெரியாத எண்ணற்ற திட்டங்கள் மற்றும் பயன்கள் உள்ளது. இவற்றை எல்லாம் பற்றி நாம் முழுமையாக தெரிந்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட ஏதோ திட்டத்திற்கான வட்டி மற்றும் சேமிப்பு தொகையினை பற்றி தெரிந்துக்கொள்வது இன்றியமையாத ஒன்றாக கருதப்படுகிறது. அதனால் இன்று ICICI வங்கியில் மாதாந்திர திட்டமாக உள்ள RD திட்டத்தில் குறிப்பிட்ட தொகையினை முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் தொகை கிடைக்கும் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
2000 RD for 5 Years ICICI Bank Calculator:
முதலீடு தொகை:
ICICI பேங்கில் அறிமுகம் செய்துள்ள இந்த RD திட்டத்தில் நீங்கள் சேர வேண்டும் என்றால் அதற்கான குறைந்தபட்ச தொகை 500 ரூபாய் ஆகும். மேலும் அதிகபட்ச தொகையாக எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
வட்டி விகிதம்:
வட்டி விகிதம் என்பது டெபாசிட் தொகை முதிர்வு காலத்தினை அமையும். அதேபோல் மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் என இருவருக்கும் வட்டி விகிதம் வேறுபட்டு அளிக்கப்படும்.
முதிர்வு காலம்:
இந்த மாதாந்திர திட்டத்தில் உங்களுக்கான முதிர்வு காலம் 6 மாதம் முதல் 10 வருடம் வரை ஆகும். நீங்கள் இந்த திட்டத்தில் சேரும் போதே உங்களுக்கான முதிர்வு காலத்தை தேர்வு செய்ய வேண்டும்.
2,000 ரூபாய் மாதந்தோறும் செலுத்தினால் கிடைக்கும் தொகை எவ்வளவு:
ICICI வங்கியில் உள்ள இந்த RD திட்டத்தில் நீங்கள் மாதந்தோறும் 2,000 ரூபாய் 5 வருட கால அளவில் செலுத்தினால் கிடைக்கும் தொகை எவ்வளவு என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| டெபாசிட் தொகை | முதிர்வு காலம் | General Citizen | Senior Citizen | ||
| 7.10% வட்டி | மொத்த தொகை | 7.60% வட்டி | மொத்த தொகை | ||
| 2,000 ரூபாய் | 5 வருடம் | 24,248 ரூபாய் | 1,44,248 ரூபாய் | 26,166 ரூபாய் | 1,46,166 ரூபாய் |
35,000 ரூபாய் வட்டி மட்டுமே கிடைக்க கூடிய திட்டம்
| மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |














