25 Lakh Home Loan Interest Rate Prepayment Calculator Hdfc
கடன் வாங்கும் பழக்கம் என்பது அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் அதனை திருப்பி செலுத்தும் நடைமுறை என்பது தான் ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரியாக இருக்கிறது. ஏனென்றால் கடன் வாங்கும் போது EMI தொகை கட்டுவது சாதாரணமானதாக இருந்தாலும் கூட அதில் வட்டியை குறைக்கும் முறையினை தான் பலருக்கும் சிந்திக்கிறார்கள். அந்த வகையில் பார்த்தால் நீங்கள் மாதந்தோறும் செலுத்தும் EMI தொகையை விட கூடுதலாக குறிப்பிட்ட பணத்தினை மாதம் மற்றும் வருடம் என செலுத்துவதன் மூலம் வட்டி தொகையானது விரைவாக குறைய ஆரம்பிக்கும். ஆகையால் இத்தகைய முறைப்படி பணத்தினை செலுத்துவதன் மூலம் வட்டி தொகை குறைந்து சேமிப்பு தொகையும் உங்களுக்கு கிடைக்கும். எனவே ஒரு எடுத்துக்காட்டாக Hdfc வங்கியில் வாங்கிய 25 லட்சம் வீட்டுக் கடனுக்கான EMI தொகையுடன் கூடுதலாக குறிப்பிட்ட தொகையினை செலுத்தினால் எவ்வளவு வட்டி குறையும் என்பதை கால்குலேட்டர் வழியாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
25 Lakh Home Loan EMI for 20 Years Hdfc Bank:
வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமாக Hdfc வங்கியில் 8.60% முதல் தோராயமாக அளிக்கப்படுகிறது. மேலும் கடனுக்கான கடன் காலமாக 30 வருடம் வரை அளிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக:
கடன் தொகை: 25,00,000 ரூபாய்
வட்டி விகிதம்: 8.95%
கடன் காலம்: 20 வருடம்
மாத EMI தொகை: 22,413 ரூபாய்
மொத்த வட்டி தொகை: 28,79,077 ரூபாய்
அசல் தொகை: 53,85,327 ரூபாய்
வீட்டுக் கடன் வாங்குவது நல்லதா.. ஒருவேளை 10 லட்சம் வாங்கினால் அதனுடைய வட்டியை எப்படி குறைக்கலாம்
EMI தொகையுடன் கூடுதலான பணம் கட்டினால் எவ்வளவு வட்டி குறையும்:
கூடுதலாக செலுத்தும் தொகை | மொத்த வட்டி தொகை | வட்டி சேமிப்பு தொகை |
22,413 ரூபாய் EMI தொகை | Rs. 28,79,077/- | 0 |
22,413 ரூபாய் EMI தொகையுடன் + மாதம் 500 ரூபாய் | Rs. 26,82,813/- | Rs. 1,96,264/- |
22,413 ரூபாய் EMI தொகையுடன் + மாதம் 1000 ரூபாய் | Rs. 25,14,795/- | Rs. 3,64,282/- |
22,413 ரூபாய் EMI தொகையுடன் + வருடம் 1,00,000 ரூபாய் | Rs. 12,88,766/- | Rs. 15,90,311/- |
22,413 ரூபாய் EMI தொகையுடன் + வருடம் 2,00,000 ரூபாய் | Rs. 8,28,365/- | Rs. 20,50,712/- |
22,413 ரூபாய் EMI தொகையுடன் + வருடம் 10,000 ரூபாய் + மாதம் 500 ரூபாய் | Rs. 23,98,447/- | Rs. 4,80,630/- |
குறிப்பு: நீங்கள் EMI தொகையுடன் கூடுதலான தொகையினை மாதம் மற்றும் வருடத்திற்கு ஏற்றவாறு செலுத்தும் இந்த தொகை மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |