பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 3 லட்சம் செலுத்தினால் 5 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா..?

Advertisement

3 Lakh FD for 5 Years Post Office Interest rate Calculator

ஒருவரின் வாழ்க்கையில் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் நாம் சேமிக்கும் பழக்கத்தினை சிறு வயதில் இருந்து வைத்துக் கொண்டால் தான் நம்முடைய ஏதோ ஒரு அவசர தேவைக்கு அது பயனளிக்கும் விதமாக இருக்கும். இத்தகைய கருத்தினை பலரது குடும்பத்தில் நினைத்து தான் போஸ்ட் ஆபீசில் உள்ள RD, சீனியர் சிட்டிசன் திட்டம் மற்றும் பிக்சட் டெபாசிட் திட்டம் என இத்தகைய திட்டங்களில் பணத்தினை சேமித்து வருகிறார்கள். இவ்வாறு சேமிக்கும் பழக்கம் என்பது நல்லதாக இருந்தாலும் கூட அதிலும் சில வகையான தகவலை அறிந்துக் கொள்வது நல்லது. அதனால் இன்று ஒரு எடுத்துக்காட்டாக பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 3 லட்சம் ரூபாயினை 5 வருட கால அளவில் டெபாசிட் செய்தால் கிடைக்கும் வட்டி மற்றும் அசல் எவ்வளவு என்பதை பார்க்க போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

போஸ்ட் ஆபீஸ் பிக்ஸட் டெபாசிட் 2023:

பிக்சட் டெபாசிட் திட்டம் என்பது நம்மிடம் உள்ள குறிப்பிட்ட தொகையினை மொத்தமாக டெபாசிட் செய்து குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நிலையான தொகையினை பெரும் ஒரு முறையாக இருக்கிறது.

சேமிப்பு தொகை:

குறைந்தபட்ச சேமிப்பு தொகை  அதிகப்பட்ச தொகை 
1000 ரூபாய் வரம்பில் இல்லை.

 

வட்டி விகிதம்:

  1. 1 வருடம்- 6.8%
  2. 2 வருடம்- 6.9%
  3. 3 வருடம்- 7.0​%
  4. 5 வருடம்- 7.5 %

சேமிப்பிற்கான காலம்:

தபால் துறையில் உள்ள பிக்சட் டெபாசிட்  திட்டத்திற்கான சேமிப்பு காலம் 1, 2, 3 மற்றும் 5 வருடம் ஆகும்.

5 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் எவ்வளவு:

எடுத்துக்காட்டாக:

சேமிப்பு தொகை: 3,00,000 ரூபாய் 

வட்டி விகிதம்: 7.5%

முதிர்வு காலம்: 5 வருடம் 

வட்டி தொகை: 1,34,984 ரூபாய் 

அசல் தொகை: 4,34,984 ரூபாய் 

5 ஆண்டில் Rs. 9,59,000/- பெறக்கூடிய அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம் 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement