SBI நகை கடன் வட்டி விகிதம் 2023
பொதுவாக நாம் அனைவரும் தங்கம் வாங்க கடைக்கு சென்றால் அதில் பல கேள்விகளை கேட்போம். அதாவது வாங்க போகும் தங்கம் எத்தனை கிராம், செய்கூலி மற்றும் சேதாரம் என்ன..? என்று இவற்றை எல்லாம் நன்றாக கேட்டு கவனித்த பிறகு தான் வாங்கி வருவோம். இவ்வாறு நாம் பார்த்து பார்த்து வாங்கி வந்த தங்கத்தை நமக்கு ஏதாவது அவசர தேவை என்று வரும் போது உடனே அதை வைத்து லோன் வாங்கலாம் என்று முடிவு செய்வோம். அதன் பிறகு வங்கிக்கு சென்று நகைக்கான தொகை எவ்வளவு என்று கேட்போமே தவிர அதற்கான வட்டி எவ்வளவு, EMI எவ்வளவு என்ற விவரங்களை கேட்பது இல்லை. ஆகவே இன்று SBI வங்கியில் 3 லட்சம் ரூபாய் நகைக்கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
3 Lakh Gold Loan SBI Calculator 2023:
வயது வரம்பு:
SBI வங்கியில் நீங்கள் தங்க நகைக்கடனை பெற வேண்டும் என்றால் அதற்கு குறைந்தப்பட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 75-ற்குள் இருக்க வேண்டும்.
கடன் தொகை:
இத்தகைய வங்கியில் கிராம் ஒன்றிற்கு 3,500 ரூபாய் முதல் 4,150 ரூபாய் வரை அளிக்கப்படுகிறது. மேலும் இதில் குறைந்தப்பட்ச தொகையாக 20,000 ரூபாய் முதல் 50,00,000 ரூபாய் வரை அளிக்கப்படுகிறது.
வட்டி விகிதம்:
இதில் உங்களுக்கு தற்போதைய வட்டி விகிதமாக 7.50% வரை வழங்கபடுகிறது.
கடனுக்கான காலம்:
கடனாக வாங்கிய தொகையினை 3 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
பேங்கில் 10 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால் அதற்கான மொத்த வட்டித்தொகை எவ்வளவு தெரியுமா
SBI Gold Loan Interest Rate Calculator:
கடன் தொகை: 3,00,000 ரூபாய்
வட்டி விகிதம்: 7.50%
EMI தொகை: 9,331 ரூபாய்
மொத்த வட்டி தொகை: 35,947 ரூபாய்
அசல் தொகை: 3,35,947 ரூபாய்
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
2.5 லட்சம் பேங்கில் கோல்டு லோன் வாங்கினால் எவ்வளவு வட்டி தொகை தெரியுமா
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |