365 Days RD Details in Indian Bank in Tamil
நாம் அனைவருமே எதிர்கால பயன்பட்டிற்காக சம்பாதிக்கும் பணத்தை ஏதோவொரு சேமிப்பு திட்டத்தில் சேமிக்க வேண்டும் என்று நினைப்போம். அப்படி சேமிக்க தொடங்குவதற்கு முன் எந்த சேமிப்பு திட்டத்தில் சேமித்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம். எனவே நீங்கள், ஒரு இந்தியன் வங்கி வாடிக்கையாளராக இருந்து இந்தியன் வங்கியில் சேமிக்க விரும்பினால் அதில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து சேமிக்க தொடங்கலாம். எனவே இப்பதிவில் இந்தியன் வங்கியில் உள்ள RD திட்டத்தில் மாதம் 2000 ரூபாய் நீங்கள் செலுத்துகிறீர்கள் என்றால் அதற்கான வட்டி எவ்வளவு..? முதிர்வு காலத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இந்தியன் வங்கி RD சேமிப்பு திட்டம்:
டெபாசிட் தொகை:
இந்தியன் வங்கியில் RD சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ருபாய் வரை நீங்கள் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
டெபாசிட் காலம்:
இந்தியன் வங்கியில் RD சேமிப்பு திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரையிலான கால அளவை தேர்வு செய்து டெபாசிட் கொள்ளலாம்.
வட்டி விகிதம்:
இந்தியன் வங்கியில் RD சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதமானது நீங்கள் தேர்வு செய்யும் டெபாசிட் காலத்தை பொறுத்தும், நீங்கள் டெபாசிட் செய்யும் தொகையினை பொருத்தும் மாறுபடும்.
கால அளவை பொறுத்து 4.00% முதல் 5.75% வரை வழங்கப்படுகிறது.
உதாரணமாக..
ஜென்ட்ரல் சிட்டிசன்:
நீங்கள் இந்தியன் வங்கியில் RD சேமிப்பு திட்டத்தில் 1 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் மாதம் 2000 ரூபாய் செலுத்தி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு 5.00% வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.
அதாவது உங்களுக்கு மொத்தமாக 657 ரூபாய் வட்டித்தொகை அளிக்கப்படுகிறது. எனவே நீங்கள் 1 வருடத்திற்கு பிறகு, நீங்கள் டெபாசிட் செய்த தொகையையும் சேர்த்து மொத்தமாக 24,657 ரூபாய் பெறுவீர்கள்.
சீனியர் சிட்டிசன்:
இதுவே நீங்கள் சீனியர் சிட்டிசனாக இருந்தால் 1 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் மாதம் 2000 ரூபாய் செலுத்தி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு 5.50% வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.
அதாவது உங்களுக்கு மொத்தமாக 724 ரூபாய் வட்டித்தொகை அளிக்கப்படுகிறது. எனவே நீங்கள் 1 வருடத்திற்கு பிறகு, நீங்கள் டெபாசிட் செய்த தொகையையும் சேர்த்து மொத்தமாக 24,724 ரூபாய் பெறுவீர்கள்.
இரட்டிப்பு சந்தோசம், ஆமாங்க நீங்கள் 10,000 செலுத்தினால் 20,000 பெற கூடிய தபால் துறை திட்டம்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |