Post Office FD Interest Rate 2023 Calculator
மனிதனின் வாழ்க்கையில் சேமிப்பு என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. நீங்கள் வாழ்நாள் முழுவதும் பணத்தை சம்பாதிக்க முடியாது. வயது வயதாக ஓய்வு தேவைப்படும். வயதான காலத்தில் உட்கார்ந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் சாப்பிட வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக இருப்பது பணம் தான். நான் தான் சம்பாதிக்கின்ற பணத்தை என் பிள்ளைகளை நன்றாக வளர்த்து விட்டேன் அவர்கள் என்னை பார்த்திருப்பார்கள் என்று நினைக்காதீர்கள். இன்றைய கால கட்டத்தில் யாரையும் நம்பாதீர்கள். உங்களிடம் பணம் இருந்தால் மட்டுமே இந்த உலகம் உங்களை மதிக்கும். நீங்கள் எங்கு சேமிப்பது என்று தேடாதீர்கள். ஏனென்றால் உங்கள் ஊரில் உள்ள தபால் துறையில் நிறைய வகையான திட்டங்கள் உள்ளது. அதில் இன்றைய பதிவில் தபால் துறையில் உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தபால் துறை பிக்சட் டெபாசிட் திட்டம்:
தகுதி:
18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையாலாம்.
டெபாசிட் தொகை:
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாயும், அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம்.
டெபாசிட் காலம்:
தபால் துறை பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 1,2,3,5 என நன்கு வகையான டெபாசிட் காலங்கள் கொடுக்கப்படுகிறது. அதில் உங்களின் விருப்பத்திற்கு செலக்ட் செய்து கொள்ளலாம்.
வட்டி:
நீங்கள் தேர்வு செய்யும் காலநிலையை பொறுத்து வட்டி கொடுக்கப்படுகிறது.
1 வருடம் என்றால் 6.90%
2 மற்றும் 3 வருடம் என்றால் 7.00%
5 வருடம் என்றால் 7.50%
எவ்வளவு கிடைக்கும்:
டெபாசிட் தொகை | 5 லட்சம் |
வட்டி | 7.50 |
டெபாசிட் காலம் | 5 வருடம் |
வட்டி தொகை | 2,26,647 ரூபாய் |
மெச்சூரிட்டி தொகை | 7,26,647 ரூபாய் |
குறிப்பு: நீங்கள் தேர்வு செய்யும் கால அளவை பொறுத்து வட்டி தொகை மட்டும் மெச்சூரிட்டி தொகை மாறுபடும்.
5 லட்சம் தொழில் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு தெரியுமா..?
3 மாதத்திற்க்கு ஒரு முறை 10,250 ரூபாய் வட்டி தரும் SBI திட்டம்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |