5 Lakh Personal Loan EMI Canara Bank Calculator
பொதுவாக நாம் எந்த ஒரு செயலை செய்தாலும் அதற்கு முன்பு அந்த செயலில் இருக்கும் நன்மை மற்றும் தீமை இரண்டினையும் நன்றாக யோசிக்க வேண்டும். ஏனென்றால் அப்போது தான் நமக்கு அதில் நடக்கும் செயல்களையும் புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் இன்றைய காலத்தை பொறுத்தவரை நிறைய நபர்கள் வங்கியில் கடன் வாங்குகின்றனர். சிலர் வாங்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். அதனால் அதில் இருக்கும் வட்டி மற்றும் செலுத்த வேண்டிய தொகை போன்றவற்றை தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆகவே கனரா வங்கியில் 5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய தொகை மற்றும் முழு வட்டி எவ்வளவு என்று விரிவாக பார்க்கலாம் வாங்க..!
தனிநபர் கடன் என்றால் என்ன..?
நீங்கள் வாங்கும் கடன் முறைகளில் தனிநபர் கடனும் ஒன்று. எந்த வகையான பொருட்கள் அல்லது பத்திரங்களையும் அடமானம் வைக்காமல் உங்களின் நிதிநிலையை மட்டும் கொண்டு கடனை பெரும் முறையே தனிநபர் கடன் எனப்படும்.இதில் பெரும்பாலான மக்கள் தனிநபர் கடனை தான் விரும்புகிறார்கள்.
கனரா வங்கி தனிநபர் கடன் வட்டி:
கனரா வங்கியில் தனிநபர் கடன் பெறுவோருக்கான வட்டி விகிதமானது 13% முதல் 14.15% வரை தோராயமாக இருக்கிறது.
5 லட்சம் கனரா வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:
தனிநபர் கடன் தொகை | 5 லட்சம் |
வட்டி விகிதம்% | 13% |
கடன் காலம் | குறைந்த பட்சம் 3 வருடம் |
மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை | 16,847 ரூபாய் |
மொத்த வட்டி தொகை | 1,06,491 ரூபாய் |
செலுத்த வேண்டிய மொத்த தொகை | 6,06,491 ரூபாய் |
குறிப்பு: நீங்கள் வாங்கும் கடன் தொகை மற்றும் தகுதி அளவுகோளினை பொறுத்து உங்களுடைய கடன் காலம் மற்றும் வட்டி மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |