Sbi Home Loan Emi Calculator Per Month in Tamil
வீடு என்பது ஒரு மனிதனுக்கு முக்கியமான தேவை ஆகும். இது என்னவென்றால் வீடு இல்லாதவனுக்கு தான் அதனுடைய முக்கியத்துவம் தெரியும். ஏனென்றால் ஒரு வீடு என்றால் அதனை கட்டுவதற்கு அவர்கள் படும்பாடு பெரிய கஷ்டமாக இருக்கும். வாழ்க்கையில் வீடு கட்டுவது தான் பெரிய கனவாக இருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு வீடு கட்டும் அளவிற்கு பணம் எங்கிருந்து கிடைக்கும்.
அப்படி கிடைத்தால் அதனை யார் தான் சும்மா தருவார்கள். எப்படி இருந்தாலும் அதற்கு வட்டி வாங்காமல் இருக்கமாட்டார்கள். கண்டிப்பாக வட்டி கொடுத்து தான் ஆகவேண்டும். அதேபோல் வட்டிக்கு வாங்கினாலும் அதனை திரும்ப கொடுக்கவேண்டும் என்றால் அதனை மொத்தமாக தான் வாங்க வேண்டும் என்பார்கள். ஆனால் நாம் மொத்தம் பணம் கிடைக்கவில்லை என்பதால் தான் வட்டிக்கு வாங்குவோம்.
நாம் செய்யும் தவறு என்னவென்றால் வட்டிக்கு வாங்கி அந்த வட்டியை மட்டும் தான் கடைசி வரை கொடுப்போம். முடியாத பட்சத்திற்கு கட்டிய வீட்டையும் அடமானம் வைப்போம்..! அந்த அளவிற்கு காலம் மாறிவிட்டது. ஆனால் வங்கியில் வீட்டு கடன் வாங்கினால் அது பெரிய அளவில் வட்டி இருக்காது. அதேபோல் 5 வருடத்தில் உங்கள் மொத்த கடனும் தீர்ந்து விடும். வீடும் உங்களுக்கு சொந்தகமாக இருக்கும். சரி வாங்க SBI வங்கியின் வீட்டு லோன் EMI எவ்வளவு என்று தெரிந்துகொள்ளலாம்..!
50 Lakh Loan Emi Calculator Sbi in Tamil:
மொத்தமாக நாம் வீடு கட்டுவது என்றால் எவ்வளவு பணம் தேவைப்படும். ஒரு தோராயமாக ஒரு 50 லட்சம் தேவைப்படுமா அப்படி அதனை SBI வங்கியில் வீட்டு கடன் வாங்கினால் எவ்வளவு EMI செலுத்துவீர்கள் என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!
மொத்தமாக நீங்கள் வாங்கும் 50,00,000 ரூபாய் ஆகும். இந்த கடனை 5 வருடத்திற்குள் செலுத்தவேண்டும்.
அதேபோல் மாதம் மாதம் EMI யாக 97,831 ரூபாய் செலுத்தவேண்டும்.
இந்த தொகைக்கு வட்டி விகிதம் 6.5 சதவீதம் ஆகும்.
இந்த 50 லட்சத்திற்கு வட்டி மட்டும் 8,69,844 ரூபாய் செலுத்துவீர்கள்.
வட்டி மற்றும் மொத்த தொகையையும் சேர்த்து 58,69,844 ரூபாய் செலுத்தவேண்டும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |