7.5 Lakh Car Loan EMI for 5 Years in Indian Bank Calculator
பொதுவாக நாம் அனைவரும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு வாகனம் என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. இதன் படி பார்க்கும் போது நம்மில் பாதி நபர்கள் பேருந்தில் பயணம் செய்கிறார்கள். மற்ற அனைவரும் அவர் அவரின் சொந்த நலன் கருதி வண்டியினை வாங்கி அதில் பயணம் செய்கிறார்கள். இந்த வண்டியிலும் இரண்டு அல்லது மூன்று நபர்கள் மட்டும் தான் பயணிக்க முடியும். இவ்வாறு பிரச்சனை ஏற்படுவதால் வீட்டில் உள்ள அனைவருடனும் குடும்பமாக பயணம் செய்ய வேண்டும் என்றால் கார் என்பது அத்தியாவசியம் என்று கருதுகிறார்கள். இத்தகைய காரினை வாங்குவதற்காக லோனும் பெறுகிறார்கள். ஆனால் இந்த லோனை வாங்குவதற்கு முன்பாக 1 நிமிடம் இதற்கான மொத்த வட்டி எவ்வளவு மற்றும் EMI எவ்வளவு என்பதை கணக்கிடுவது இல்லை. அதனால் இன்று ஒரு உதாரணமாக இந்தியன் வங்கியில் 7.5 லட்சம் கார் லோன் பெறுவதற்கான விவரங்களை எப்படி கணக்கிடுவது என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Indian Bank Vehicle Loan Calculator:
கடன் தொகை:
நீங்கள் கடனாக கார் லோன் பெறப்போகும் தொகை 7.5 லட்சம் ரூபாய் ஆகும். ஆனால் கார் லோனிற்கான கடன் தொகை என்பது உங்களின் தகுதிக்கு ஏற்றவாறு வழங்கப்படும்.
வட்டி விகிதம்:
வட்டி விகிதமாக 7.90% முதல் 10.85% வரை வாடிக்கையாளருக்கு வழங்கப்படுகிறது.
கடன் காலம்:
நீங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்துவதற்கான கடன் காலம் 5 வருடம்.
7.5 லட்சத்திற்கான EMI தொகை மற்றும் வட்டி:
கார் லோனாக வாங்கிய 7.5 லட்சத்திற்கான வட்டி விகிதம் 7.90%-ன் படி மாதாந்திர EMI தொகையாக 15,171 ரூபாய் செலுத்து வேண்டும்.
மேலும் இத்தகைய கடனுக்கான மொத்த வட்டி தொகை என்பது 1,60,286 ரூபாய் மற்றும் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 9,10,286 ரூபாயாகும்.
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
SBI வங்கியில் 3 லட்சம் கார் லோன் பெற்றால் அதற்கான EMI மற்றும் மொத்த வட்டித்தொகை எவ்வளவு
2 லட்சம் ரூபாய் Educational Loan பெற்றால் அதற்கான EMI மற்றும் வட்டி தொகை எவ்வளவு
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |