பேங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா…! அப்போ முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க..!

Advertisement

BOB Bank Credit Card Details 

இன்றைய காலத்தில் உள்ள அனைவரும் தற்போது உள்ள வாழ்க்கையின் நடைமுறைக்கு ஏற்றவாறு வாழ வேண்டும் என்று தான் ஆசை இருக்கும். அந்த வகையில் எல்லோருக்கும் கிரேட் கார்டு பயன்படுத்த வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால் அந்த கிரெடிட் கார்டினை எப்படி பெறுவது என்றும், அதில் உள்ள அம்சங்கள் என்னவென்றும் சரியாக தகவல்கள் தெரியாமல் இருப்பதால் கிரெடிட் கார்டினை வாங்காமலே விட்டு விடுகிறார்கள். அதனால் இன்று பேங்க் ஆப் பரோடா வங்கியின் கிரெடிட் கார்டு பற்றியும் அதில் உள்ள சிறப்புகள் பற்றியும் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

BOB Bank Credit Card Names:

  • BOB Easy Credit Card
  • BOB Prime Credit Card
  • BOB Eterna Credit Card
  • IRCTC BOB Credit Card

BOB Bank Credit Card Details in Tamil:

கிரெடிட் கார்டு ஆனது பொதுவாக ஒரு நபரின் நிலையான வருமானத்தை அடிப்படையாக வைத்து தான் வழங்கபடுகிறது. ஆகவே பேங்க் ஆப் பரோடா வங்கியில் மாதாந்திர சம்பளத்திற்கு பணிபுரிபவர் மாற்றம் தொழில் புரிபவர் என இருவருக்கும் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது.

மேலும் கிரெடிட் கார்டின் தொகை என்பது ஒருவரின் சிபில் மதிப்பெண்ணின் அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது.

கிரெடிட் கார்டு வட்டி விகிதம்:

Premium, Yoddha, The Sentinel, Vikram, Eterna, Prime, Varunah Plus, Varunah, Rakshamah and Empower Business Card ஆகிய கிரெடிட் கார்டுகளுக்கு மாதாந்திர வட்டி விகிதமாக 3.25%-ம் வருடாந்திர வட்டி விகிதமாக 39.00% வழங்கப்படுகிறது.

மேலே சொல்லப்பட்டுள்ள கிரெடிட் கார்டு இல்லாமல் மற்ற கிரெடிட் கார்டுகளுக்கு 3.49% வட்டி வழங்கப்படுகிறது.

அதேபோல் நீங்கள் பெரும் கிரெடிட் கார்டினை EMI கார்டாக மாற்றி கொள்ள வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்பு உள்ளது.

பேங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டின் சிறப்பு அம்சங்கள்:

கிரெடிட் கார்டில் நிறைய வகைகள் இருப்பது போல் அதற்கான வருடாந்திர மற்றும் மாதாக்கட்டணம் என்பது நீங்கள் பெரும் கார்டினை பொறுத்து அமையும்.

அதுமட்டும் இல்லாமல் இத்தகைய கார்டில் அவற்றின் மதிப்பிற்கு ஏற்றவாறு 1 முதல் 5 வரையிலான ரிவார்ட் பாயிண்ட் வழங்கப்படுகிறது.

அதேபோல் பெட்ரோல் மற்றும் டீசல் போடுதல், ஆன்லைன் ஷாப்பிங் செய்தல் என Movie டிக்கெட் புக் செய்தல் மற்றும் ஹோட்டலில் பணம் செலுத்துதல் என இதற்கும் தனித்தனியான வெகுமதிகளை பெறலாம்.

இதில் உங்களுடைய கிரெடிட் கார்டிற்கான சேரும் கட்டணம் ஆனது 250 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை உங்களின் மதிப்பிற்கு ஏற்றவாறு உள்ளது.

குறிப்பு: இத்தகைய சிறப்பு அம்சங்கள் அனைத்தும் ஒவ்வொரு கார்டு ஏற்றவாறும் மாறும்.

HDFC கிரெடிட் கார்டு வைத்து இருப்பவரா நீங்கள்..அப்போ முதலில் இதை தெரிந்துகொள்ளுங்கள் 

வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..  இனி மாத EMI எவ்வளவு உயரும்.. 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement